தனியார் குளிர்பதன பெட்டி குடோனில் தீ விபத்து
Mar 26, 2025
முகப்பு
உலகின் ஆபத்தான கடல் கல்லறை... களமாடும் கம்பீர பெண் சிங்கங்கள்
Mar 25, 2025 01:47 PM
61
அட நம்ம தமிழ் பொண்ணா இவங்க? ‘திகில்’ கடலில் ‘திரில்’ பயணம்....
கடல். . அழகு. . ஆச்சர்யம். . பிரம்மாண்டம். . கம்பீரம். . என அதை வர்ணிக்க வார்த்தைகள் போதாது.
அதே கடல். . . ‘ ஒரு அரக்கன்’. . ‘சற்றும் கருணையின்றி உயிர்குடிக்கும் சாத்தான்’ என்று சொல்ல வைத்ததுதான் கடல் அரக்கனின்அடக்கமுடியாத கொம்பாகக் கருதப்படும் ‘கேப் ஹார்ன்’ என்ற கடற்பகுதி
கடந்த நூற்றாண்டுகளில் அந்த ‘கேப் ஹார்ன்’-ஐ சுற்றிவர வீர-தீர முயற்சியோடு வந்த 10,000 பேரை வாரிச்சுருட்டி வாயில் போட்டு ஏப்பம் விட்டதுதான் 'Cape Horn'.
அதனால்தான் உலகிலேயே கடலடியில் உள்ள பிரம்மாண்ட கல்லறை என்கின்றனர் கடல் பிரயாணிகள்.
ஆனால், அதை நாங்கள் கடந்து காட்டுகிறோம் எனப் புறப்பட்டு சாதித்துக் காட்டுபவர்கள் தான் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த இரு லெஃப்டினன்ட் கமெண்டர்கள் தில்னாவும். . ரூபாவும். . .
அவர்கள் தங்களது சாதனைப் பட்டியலில் கேப் ஹார்னைக் கடந்து புதிதாக ‘கேப் ஹார்னர்ஸ்’ என்ற பட்டம் பெற்று... கெத்து காட்டியுள்ளனர்.
அட்லான்டிக்கும், பசிஃபிக்கும் சங்கமிக்கும் இந்த இடத்தில் காலநிலை என்பது எப்போது எப்படி மாறும் என்று சற்றும் கணிக்க முடியாதது மர்மமான ஒன்று.
காற்றோட்டத்தை நம்பி மட்டுமே பயணித்து வரும் இவர்களுக்கான சவால்கள் அதிகம்.
800 கி.மீட்டரில் அட்லான்டிக் பனிப் பிரதேசம் என்பதால் ரத்தத்தை உறையச் செய்யும் குளிர். . மணிக்கு 75 கி.மீ காற்றின்வேகம். 16 அடி உயரத்துக்கு சீறும் கடல் அலை.
எந்த நேரம் கவிழ்த்துப் போட்டு அரக்கக் கடல் வேடிக்கை பார்த்தாலும் காப்பாற்றக்கூட ஆள் இல்லாத தண்ணீர் தேசம். .
Breath ((Show Rough sea visuals with Screeching Eagle sound to make script even scary ))
அந்த சாகசக் கடலுக்குள் சரித்திரம் படைப்பதற்காக கடலை வலம் வர 4 மாதங்களுக்கு முன் புறப்பட்டனர் இந்த இரு சிங்கப் பெண்கள். மொத்தம் 8 மாதங்களில் 40 ஆயிரம் கி.மீ., பயணிக்கின்றனர்.
இவர்கள் அடுத்து செல்லப் போவது கேப் ஆஃப் குட் ஹோப். அதுவும் உலகின் ஆபத்தான கடற்பகுதி.
இவர்களுக்கு எப்படி இத்தனை வீரம் வந்தது என தேடியபோதுதான், இவர்களைப் பெற்ற இருவரும் வீரர்கள் என தெரியவந்தது.
தில்லான வீராங்கனையான தில்னா கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் சேவையாற்றிய தேவதாசனின் மகள்.
லெஃப்டினன்கமேண்டர் ரூபா புதுச்சேரியைச் சேர்ந்தவர். இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஜி.பி. அழகிரிசாமியின் மகள்.
சரி இவர்களுக்கு கடலோடிப் பயிற்சியளித்த குரு யார் தெரியுமா?
கமேண்டர் அபிலாஷ் டாமி. இருமுறை சாகசக் கடலில் வெற்றிகரமாக வலம் வந்த இவர் கோல்டன் குளோப் ரேஸ் விருதும் வென்றவர்.
பயிற்சிக்காக கோவா தொடங்கி கேப் டவுன் வழியாக ரியோ டி ஜெனிரோ வரை 6 பேர் கொண்ட குழுவோடு கடந்த ஆண்டு பயணித்து ஒத்திகை பார்த்தனர்.
தற்போது Double Handed Mode என்ற பெயரில் இருவர் மட்டுமே குழுவாகக் கொண்டு பயணித்து வருகின்றனர். படகை செலுத்தவே இருவர் தேவை எனில் உறக்கம் என்பது எட்டாக்கனிதான் இவர்களுக்கும். .
அப்படியே யாரும் அணுக முடியாத பாய்ன்ட் நீமோவை இவர்கள் ஏற்கெனவே கடந்து சாதித்ததும் நினைவிருக்கலாம்.
Breath
சரி எதற்காக இந்த சாகசப் பயணம் தெரியுமா?
இந்தியக் கடற்படையில் பெண்களும் வீரம் மிக்கவர்கள் என உலகுக்குப் பறைசாற்ற. . யாரும் அணுகமுடியாத இடத்துக்கும் இந்தியக் கடற்படை நுழையும் என சாதித்துக் காட்ட. .
அதோடு, அங்கிருக்கும் தண்ணீரை சேகரித்து ஓசனாலஜி ஆய்வுக்குக் கொடுத்தால், அதன் அடர்த்தி, மினரல்கள், உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
கடற் கழிகள். . பாறைக் கரைகள். . சீறும் அலைகளை கடந்து
பொன்னியின் செல்வனில் படகோட்டும் பூங்குழலி போல. . இந்தியர்களின் கடல் பாரம்பரியத்துக்கு மணிமகுடம் சூட்ட INS தாரிணியில் வரும் தாரகைகளை நாமும் வாழ்த்துவோம்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu