RECENT NEWS

பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீர் மரணம்... வீட்டில் நடந்தது என்ன ?

BIG STORIES

ஆட ஆட உயிர்போவது ஏன்? நடனமாடும்போது இதயத்தில் என்ன நடக்கும்? யாரெல்லாம் டான்ஸ் ஆடக்கூடாது?

Mar 25, 2025 11:23 AM

145

ஆட ஆட உயிர்போவது ஏன்? நடனமாடும்போது இதயத்தில் என்ன நடக்கும்?
யாரெல்லாம் டான்ஸ் ஆடக்கூடாது?

ஆட ஆட உயிர்போவது ஏன்? நடனமாடும்போது இதயத்தில் என்ன நடக்கும்?

துள்ளவும் இல்லை, துடிக்கவும் இல்லை. . அழகாக சிரித்து மயில்போல் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே பிரிகின்றன பல உயிர்கள். .

எல்லாம் இந்த கொரோனோ ஊசிதான் காரணம் என கமென்ட் செய்பவர்களுக்கு ஒரு சின்ன ரீவைண்ட். வாங்க. . கொரோனா என்றால் என்ன என அறியாத 1518-ம் ஆண்டுக்கு டைம் டிராவல் செய்வோம். . .

தற்போதைய பிரான்ஸ் . . அப்போதைய ரோமானிய மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலம். . ஸ்ட்ராஸ்பௌர்க் நகரில் நடனமாடி ஆடியே கொத்துக் கொத்தாக மடிந்தனர் மக்கள்.

சாலையில் நடந்து சென்ற Frau என்ற பெண், திடீரென ஏதோ சந்தோஷத்தில் நடனமாடத் தொடங்கினார். சோர்ந்த போதும் மீண்டும் எழுந்து, பசி, தூக்கம், வெட்கம் பாராமல் ஒரே சீராக வாரக்கணக்கில் நடனமாடினாராம். யார் தடுத்தும் அவரை நிறுத்த முடியவில்லை. அதைப் பார்த்து பல பெண்களும் ஆண்களும் கூட்டம் கூட்டமாக நடனமாடினர். இதனால் மக்கள் மகிழ்ச்சியாகத்தானே நடனமாடுகிறார்கள். ஆடட்டும் என கூடாரத்தோடு டிரம்ஸ், பைப்ஸ் வாசிக்கும் இசைக்கலைஞர்களும் அரசால் வழங்கப்பட்டன.

நாளுக்கு நாள் நடனமாடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அழகிய நடனம் போகப் போக பித்துப் பிடித்ததுபோல் ஆக்ரோஷமாகவும் சில சமயம் மாறின. . ரத்தம் சூடேறி பேய் பிடித்துவிட்டதாகவும் கூறப்பட்டன. மாதங்கள் கடந்தன. இந்த தொடர் நடனம் சாத்தானின் சூழ்ச்சி, கடவுளின் சாபம் என்றொல்லாம் புரளி கிளம்பின.

இதன் விளைவு, நடனம் ஆட ஆட அடுத்தடுத்து மக்கள் பொத்து பொத்தென விழுந்து உயிரிழந்தனர். இதனை Dance Plaque நோய் என்றே பெயரிட்டுவிட்டனர்.

ஆனால், வாரக்கணக்கில் ஆடியபோதும் இப்போது ஒரு முறை நடனமாடிய உடன் மாரடைப்பு ஏற்பட்டு அப்படி அப்படியே விழுந்து உயிரிழப்பவர்களின் பகீர் காட்சிகள் சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கின்றன.



ஆக்டிவ் ஆ இல்லைன்னாதான ஹார்ட் பிராப்ளம் வரும்? ஆக்டிவா டான்ஸ் ஆடினா எப்படி வரும்? என கேட்பவர்களுக்கு இது பற்றி இங்கிலாந்து மருத்துவர்கள் செய்த ஆய்வு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசன் இதழில் வெளியானது. அதன் தரவுகள் இதோ

இதயப் பிரச்சனை இல்லை என்றபோதும் உயிரிழந்ததாகச் சொல்லப்படும் சுமார் 40 வயதுகளில் உள்ள 48 ஆயிரம் பேரின் தரவுகளைக் கொண்டு 12 ஆண்டுகள் ஆய்வு நடத்தினர்.

அதில் 1714 பேர்தான் வழக்கத்துக்கு மாறாக உடலை வறுத்தியதாக கண்டறிந்துள்ளனர். அவர்கள் எத்தனை முறை, எவ்வளவு தீவிரமாக, எவ்வளவு நேரம் நடந்தார்கள் அல்லது நடனம் ஆடினார்கள் என கணக்கெடுக்கப்பட்டது.

நடனமாடும் போது இதயத்தில் என்ன நடக்கிறது? எனப் பார்க்கலாம்.

நடனம் என்பது மனதை மகிழ்விக்கும் சமூக ரீதியான உணர்வு. அந்த மகிழ்ச்சியில் கிட்னிகளின் மேல் உள்ள முக்கோண வடிவ அட்ரீனல் சுரப்பியில் இருந்து ஹார்மோன் சுரப்பதும், நடனம் ஆடும் போது உடல் அனைத்து திசைகளிலும் அசைவதும் ரத்த ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்கக்கூடுமாம்.

மகிழ்ச்சியோடு, படபடப்பு சேரும்போது இதயத்தில் சீராகத் தொடர்ந்து வந்த எலக்ட்ரிக்கல் சிக்னல்களில் திடீர் அதிவேக மாறுபாடு ஏற்படுமாம்.

அச்சமயம் இருதயத்தின் கீழ் அறைகளில் அதிவேகமாக ரத்தம் குபுக் குபுக்கென சீரற்று வெளியேற்றப்படுவதும் பிரச்சனைக்குக் காரணம் எனக் கூறியுள்ளனர்.

இதனால் வென்ட்ரிக்குலர் பைப்ரிலேசன்((ventricular fibrillation)) என இதயத்துடிப்பு சீரற்றுப் போன பின் உடலின் முக்கிய பாகங்களுக்கு ரத்த ஓட்டம் நின்று செயலிழப்பதுதான் கார்டியாக் அரெஸ்ட்.

ரத்த ஓட்டம் நின்றால் அது வழியே கடத்தப்படும் ஆக்சிஜனும் நின்று மூச்சும் உடனுக்குடன் நின்றுபோகக் கூடுமாம்

யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு வரக்கூடும் என்ற ஆய்வாளர்களின் கணிப்பைப் பார்க்கலாம்.

மூதாதையர், தாய் தந்தையருக்கு இதய பாதிப்பு இருத்தல், ஏற்கெனவே இதயப் பிரச்னை இருந்தும் தெரியவராமல் இருத்தல், மது, புகை பயன்பாடுகள், உடல் உழைப்பின்றி இருந்துவிட்டு திடீரென நடனமாடுதல், அத்லெடிக், ஸ்போர்ட்ஸ்களில் ஈடுபடுதல், ஜிம்முக்கு சென்று மிகவும் ஹெவியாக வொர்க் அவுட் செய்தல் போன்றவற்றாலும் வரக்கூடுமாம்.

அப்படின்னா, டான்சுக்கு டாடா காட்ட வேண்டுமா என்றால் வேண்டாம். இது டான்ஸ் ஆடினால் ஹார்ட் அட்டாக் வரும் என்று கூறவில்லை. மாறாக வேறு பல சூழல்களிலும் ஹார்ட் அட்டாக் வரக்கூடும் என்றும் கூறியுள்ளது. உதாரணத்துக்கு ஸ்ட்ரெஸ் ஆன சூழலில் இடைவிடாமல் சிரிக்கும் போதும் ((பிரியமான தோழி படத்தில் சிரிக்கும்போது மணிவண்ணன் இறப்பதாக வரும் காட்சி)), உடல் வெதுவெதுப்பாக இருக்கும்போது திடீரென மிகக் குளிர்ந்த நீரில் குதித்தல், ஏதேனும் இன்ப அதிர்ச்சி அல்லது ஏற்க முடியாத சோகம் ஏற்படும்போதுமோ அல்லது உறக்கத்தில் கூட கார்டியாக் அரெஸ்ட் வரலாமாம்.

இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது எனப் பார்க்கலாம்.

நீங்கள் வழக்கமாக சாதாரண எக்சர்சைஸ் முதல் தொடங்கி என்னென்ன வேலைகளை செய்யலாம் என உங்கள் மருத்துவர்களிடம் ஆண்டுதோறும் இதய நலன் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

டான்ஸ் கிளாஸ், ஜூம்பா கிளாஸ், ஜிம் ஆகியவற்றில் சேரும் முன் கார்டியாக் பிட்னஸ் டெஸ்ட் அவசியம்.

அனைத்து ஜிம்களிலும் முதலுதவிப் பெட்டி இருப்பது போல AED எனப்படும் ஆட்டோமெடிக் எக்ஸ்டர்னல் டீஃபைப்ரிலேட்டர் வைத்திருக்குமாறு உத்தரவிடலாம்.

தீ விபத்து நடந்தால் தப்புவது எப்படி? என பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலைகளில் கற்றுக் கொடுக்கும்போதே CPR முதலுதவி செய்யவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்வது எனப் பார்க்கலாம். .

மயங்கியவரைக் கிடத்தி, நீர்தெளித்தோ, தட்டியோ எழுப்பிப் பார்க்க வேண்டும். அசைவில்லாவிட்டால், நெஞ்செலும்புக்கூட்டின் மையத்தில் உள்ளங்கையையும், அந்த கைக்கு மேல் மற்றொரு கையையும் வைத்து முழு உடல் பலத்தையும் கூட்டி, வேகவேகமாக அழுத்தம் தந்துகொண்டே இருக்க வேண்டும். அதன்பின், மயங்கியவரின் தாடையை மேற்புரமாக உயர்த்தி, அவரது மூக்கை அடைத்துப் பிடித்தபடி, நமது மூச்சை உள் இழுத்துப் பிடித்து பின் அவரது வாயில் அந்தக் காற்றை வேகமாக ஊத வேண்டும்.

இப்படி பலமுறை செய்தால், உயிரைக் காப்பாற்ற வாய்ப்புண்டு. பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல் கட்டாயம்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

20 பெண்களிடம் சங்கிலி பறிப்பு.. கொள்ளையன் சுட்டுக்கொலை.. ஜாஃபரின் திகில் பின்னணி..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies