கொடைக்கானலில் 110 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை.. சதமடித்த டீசல் விலை
தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் டீசல் விலை நூறு ரூபாயை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எரிபொருளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
மலைப் பிரதேசமான கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110ரூபாய் 36 காசுகளுக்கும், டீசல் 100ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமவெளி பகுதிகளை விட மலைப்பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களை கொண்டு செல்லுவதற்கான போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், மற்ற இடங்களை விட அங்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது.
இதேபோன்று, கள்ளக்குறிச்சியிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 109ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பெட்ரோல் கொண்டு செல்லப்படும் நிலையில், போக்குவரத்து செலவு காரணமாக, மற்ற இடங்களை விட கள்ளக்குறிச்சியில் நான்கு ரூபாய் வரை அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments