RECENT NEWS

காவலர் தாய் கொலை 'ஸ்பைடர் உமன்' சிக்கியது எப்படி ? வெளியான திகில் தகவல்

முகப்பு

அலைச்சீற்றம், புயல்காற்று, நிலநடுக்கம்.. எப்படித் தாங்கி நிற்கும் பாம்பன் பாலம்?

Apr 07, 2025 01:48 PM

68

அலைச்சீற்றம், புயல்காற்று, நிலநடுக்கம்.. எப்படித் தாங்கி நிற்கும் பாம்பன் பாலம்?

பாம்பன் பாலங்கள் ஒப்பீடு

கடலுக்கு நடுவே தூண்கள் நட்டு. . துருப்புடிக்காமலிருக்க துத்தநாகம் தீட்டி... ஆர்ப்பரிக்கும் அலைகடலுக்கும்... உப்புக் காற்று அரிக்கும் துருவுக்கும் தாங்கக் கூடியதாக எப்படி உருவாக்கப்பட்டது புதிய பாம்பன் பாலம்...

ஆற்றுப் பாலத்தை தட தடவென ரயில் கடக்கும் போதே ‘ஆ’-வென வியந்து பார்த்தவர்களுக்கு நிச்சயம் இந்த பாம்பன் பாலப் பயணம் ஒரு வரம் தான்.

திடீர் மழையும், திடீர் காற்றும் எந்த நிமிடமும் வானிலையை மாற்றும்.. அலைகள் சீறும், புயல்களும் அடிக்கடி விசிட் அடிக்கும் இடம் இது.. உலகின் அதிக உப்புக்காற்றால் இரும்பை துருவால் துரும்பாக்கி பலவீனமாக்கும் பகுதிகளில் ஒன்று ராமேசுவரம்...

ஆனால்... பயணிப்பவருக்கோ இத்தகைய சவால்கள் ஏதும் பாதிக்காமல் சாகசம் கலந்த சொகுசு அனுபவத்தைத் தரும்..

ரயிலின் வேகத்தில் காற்று மோதி ... கடலின் அலை வந்து சாரலாய் முகம் வருட ... இந்த ரயிலில் உற்சாகம் பொங்க பயணிக்க வைத்தன் பின்னணியில், மிகப்பெரும் மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது...

இந்த சவால்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சற்று சரித்திரம், பூகோளத்தைப் புரட்ட வேண்டியதும் அவசியம்.

பாடபுத்தகத்தில் எங்கோ கேட்டது போல் இருக்கும் பாக்-ஜல-சந்திதான் இது.. இந்தியாவின் பால்க் விரிகுடா - இலங்கையின் மன்னார் வளைகுடாவை நீரில் இணைக்கும் பகுதிதான் தமிழில் ‘பால்க் நீரிணை’ எனப்படும்.

கடல் வழியில் பயணிக்கக் குறுக்கு வழி தேடி பயணத்தை மிச்சம் செய்ய முயன்ற பிரிட்டிஷாரால் உருவானது தான் பழைய பாம்பன் பாலம்..

அதற்கு அவர்களுக்கு இருந்த சவால் கப்பல் பயணிக்கும் அளவு தேவையான ஆழ, அகலம் அந்த கடல் பரப்பில் இல்லை. எனவே செயற்கையாக கடலை ஆழப்படுத்தினர்.

கப்பல்கள்தான் சென்றுவிட்டதே என கைதட்டிவிட்டு அதோடு நிற்கவில்லை. புனிதத் தலமான ராமேஸ்வரத்தை அடைய வேண்டும் என்றால் தடையாக இருந்த வழித்தடத்தில் ரயிலும் போகவேண்டும் என நினைத்தனர். ஆனால் ரயிலுக்குப் பாலம் அமைத்தால் அதில் கப்பல் வந்து மோதிவிடும் அபாயம் வந்தது.

தேவைப்படும் நேரத்தில் தண்டவாளத்தையே தூக்கி கப்பலுக்கு வழிவிடும் வகையில் வடிவமைத்தனர். 108 ஆண்டுகள் கடந்தும் சிறப்பாக இயங்கிய இந்தப் பாலத்தில் 2022 டிசம்பரில் கடைசியாக ரயில் சென்ற போது பாலத் தூண்களின் பலவீனத்தால் அதிர்வுச் சத்தம் அதிகரித்து மிரட்டியது.

அச்சமடைந்த தென்னக ரயில்வே, ஆபத்து ஏதும் நேரும் முன் விழித்துக் கொண்டது.. அந்த பாலத்தில் ரயில்கள் கடக்கத் தடை விதித்தது. அன்று முதல் ராமேஸ்வரத்துக்கு தேசத்துடனான ரயில் தொடர்பு துண்டானது...

3 மாதங்களுக்கு ஒரு முறை துருப்பிடிக்காமலிருக்க பெய்ன்ட் அடித்து வந்தனர்.. தூண்களில் துருவேறியதாலும், அதன் நூற்றாண்டு உழைத்துக் களைத்த முதுமையாலும் வேறு வழியின்றி ஓய்வு கொடுத்து உறங்க வைத்தனர்...

தனுஷ்கோடியைப் புரட்டிப் போட்ட புயலுக்கும் , நில நடுக்கங்களுக்கும் தாங்கி நின்று கம்பீரமாகக் காட்சியளித்த பாலம், தற்போது கட்டமைக்கப்பட்ட புதிய பாலத்தை ஏக்கத்தோடு பார்த்து நிற்கிறது...

இதில், பழையது போல அதிகம் துருவேறாது இருக்க 3 முறை துத்தநாகம் அதிகமுள்ள பெய்ன்ட் தீட்டியிருக்கின்றனர். 3 மாதங்களுக்கு பதில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இனி மீண்டும் துத்தநாகம் அடித்து புதுப்பித்தால் போதுமானது..

இந்தப் பாலத்தின் அடுத்த சவால் காற்று... மணிக்கு 58 கி.மீ., வேகத்தில் காற்றடித்தால் கூட பாலத்தில் ரயிலின் இயக்கம் நிறுத்தப்படும்.

இதற்காக காற்றின் அடர்த்தியைக் கண்காணிக்கும் பிரத்யேகக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.. அதற்கான அனிமோ மீட்டரில் உள்ள 3 கப்களை காற்று சுழலச் செய்யும். மணிக்கு 58 கி.மீ.,க்கு மேல் அதிகமாக காற்றின் வேகம் இருந்தால், இன்ஃப்ராரெட் லைட் ஊடுருவி, நிலையத்துக்கு சிக்னல் கொடுத்து ரயில் அவ்வழியே கடக்கப்படாமல் நிறுத்தப்படும்.

ரயில் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து ஸ்டாப் சிக்னல் வராவிட்டாலும்கூட இது தானியங்கியாக நிறுத்தப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

பழைய பாலத்தை சீரமைக்க பணியாளர்கள் படகில்தான் செல்ல வேண்டும். ஆனால், இதற்குப் பிரத்யேக வழித்தடமும், தூக்கு பாலத்துக்கு மேலே பிரத்யேக இயக்க அறைகளும், அதில் அவர்களுக்கு வசதியாக காற்றின் ஈரப்பதத்திலிருந்து பணியாளர்களுக்கு தூய குடிநீர் வழங்கும் வசதிகளும் கூடசெய்து கொடுக்கப்பட்டுள்ளன.

பாலத்துக்குக் கீழ் பெரிய கப்பல் கூட எளிதாகக் கடக்கும் வகையில், 81 டிகிரி அளவுக்கு செங்குத்தாகத் தூக்கி வழிவிடும் தன்மை கொண்டது.

இந்தப் பாலத்தில் கடலுக்கு அடியில் தூண்கள் அமைத்து 99 கர்டர்கள் கொண்டு இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக இரும்புத் தூண்கள் கடலுக்கு அடியில் கிட்டத்தட்ட 125 அடி ஆழத்துக்கு அஸ்திவாரமாக இறக்கி, அதனுள் சிறப்பு கான்கிரீட் கலவையை ஊற்றி வடிவமைத்திருக்கின்றனர்.

இந்த தூண்களுக்கான இரும்புப் பில்லர்கள் சரியான அளவில் கிடைக்காததால் பிரத்யேகமாக டிசைன் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்த பாலம் கடலின் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 41 அடி உயரத்திலேயே இருந்தது. ஆனால், அதிகரிக்கும் கடல் மட்டம், அலைச்சீற்ற அபாயங்களைக் கருத்தில் கொண்டு புதிய பாலமானது கிட்டத்தட்ட 50 அடி உயர்த்தப்பட்டுள்ளது.

பழைய பாலத்தை மனித சக்தியில் திறக்க 30 நிமிடங்கள், அடைக்க 20 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் ஐந்தரை நிமிடங்களுக்குள் திறந்து மூட ஏதுவாக புதிய பாலத்தில் ஸ்கெர்ஸர் ரோலிங் ((Scherzer Rolling)) லிஃப்ட் பொருத்தப்பட்டுள்ளது.

இத்தனை சவால்களையும் மீறி 2 புள்ளி 08 கி.மீ., நீளத்திலான புதிய பாலம் மனித உழைப்பு - தொழில்நுட்ப முன்னோடித்துவத்தோடு சேர்ந்து 550 கோடி மதிப்பில் உருவாகியுள்ளது...

இந்த பொறியியல் அற்புதக் கட்டுமானத்தை, ராமரின் பிறந்தநாளான ராம நவமியன்று பிரதமர் மோடி திறந்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்...

ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் மூலம் தாம்பரம் சென்ற பள்ளி மாணவர்கள் மூவர்ணக் கொடியை அசைத்தபடி மகிழ்ச்சி பொங்க அதில் பயணித்தனர்... வாரம் தோறும் சென்னை தாம்பரத்துக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே செல்லும் ரயிலில் பயணித்தால், இந்த பாலத்தை அற்புதத்தை நீங்களும் ரசிக்கலாம்...

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“என்ன சாக்கடை நாறுது..”அப்புறம்.. நறுமணமா வீசும்..? காங்கிரசார் சாக்கடை குளியல்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies