​​
Polimer News
Polimer News Tamil.

காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திருச்சியை சேர்ந்த சிவா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "காரைக்குடி செட்டிநாட்டு கால்நடை பண்ணையில் 2வது உலகப் போரின் போது அமைக்கப்பட்ட 2 விமான ஓடுதளங்களை சீரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்" எனக் கோரியிருந்தார். பிள்ளையார்பட்டி,...

நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில்  நடைபெற்ற மாநகர அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, இந்நாள் மாவட்டச் செயலாளர் கணேஷ்ராஜாவின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தார். இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட...

ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் சர்க்கார்கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள  ஆற்றின்  நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில்  உறங்கியும் பின் குளிக்க சென்ற ஆட்களை கண்டதும்  தண்ணீரில் குதித்து மறையும்  முதலையைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள்  அதனைப் பிடித்துச் செல்லுமாறு வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அமராவதி அணையில்...

மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்

உயர்கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதில் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோயம்புத்தூர் இருப்பதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான உயர்கல்வி துறை பங்களிப்போர் கலந்தாய்வு அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வுக்...

நடிகை சீதா வீட்டில் நகை திருடு போன விவகாரம் குறித்து போலீசார் விசாரணை

சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனி பகுதியில் வசித்து வரும் நடிகை சீதா தனது வீட்டில் கடந்த செப்டம்பரில் நகைகள் திருட்டுபோனதாக நவம்பர் 2 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது வீட்டில் வசித்து வரும் தனது சகோதரரின் மனைவி நகைகளை...

நேற்று பெய்த கனமழையால் திருச்செந்தூரில் வீடுகளில் புகுந்த மழைநீர் மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளில் புகுந்த மழைநீரை, குடியிருப்புவாசிகள் மின் மோட்டார் மூலமும், வாளிகளில் இறைத்தும் வெளியேற்றினர். ஜீவா நகர் மற்றும் மீனவர் காலனி பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த...

வயல் வெளியில் உலாவிய முதலை மீட்பு - வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுத்த மக்கள்..

செங்கல்பட்டு மாவட்டம், காரணை அருகே அருங்கால் கிராமத்தில் விவசாய நிலம் அருகே உலாவிய மூன்று முதலைகளில் ஒன்று பிடிக்கப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதிகாலை நேரத்தில் வயலுக்கு சென்ற விவசாயி ஒருவர், ஒரு பெரிய முதலை மற்றும் இரண்டு...

2 நாட்களாக , வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி - மீட்ட தீயணைப்பு வீரர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் கடப்பாரையால் கதவை உடைத்து மீட்டனர். கணவரை இழந்து, வீட்டில் தனியாக வசித்துவந்த வடிவம்மாள், 2 நாட்களாக செல்போனை எடுக்காததால், வெளியூரில் வசித்துவந்த அவரது மகள்கள் காவல்...

த.வெ.க. மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல்..

தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் 100 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள்...

14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் - இராணுவ வீரர் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் அருகே 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இராணுவ வீரர் தலைமறைவான நிலையில், புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டி சிறுமியின் பெற்றோரை தொந்தரவு செய்த ராணுவ வீரரின் தாய் மற்றும் சகோதரியை போலீசார் கைது செய்தனர்....