​​
Polimer News
Polimer News Tamil.

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

ஊசிபோன பிளம் கேக் விற்ற புகாருக்குள்ளான அஸ்வின்ஸ் ஸ்வீட் கடை இது தான்..! பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு 5 க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டு தயாரிப்பு இனிப்பு வகைகள் என்ற பெயரில் செயல்படும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் கரூர் கிளையில் ரிச் ப்ளம்...

உதகை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உறைபனி.. வாகன ஓட்டிகள் சிரமம்..

நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் உறைந்து காணப்பட்டது. புல்வெளிகள், மரங்கள் மீதும் உறைபனி படர்ந்தது. வாகனங்கள் மீது உறைபனி காணப்பட்டது. ...

ராணுவ வாகன விபத்தில் பலியான தமிழக வீரர்.. 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..

அசாம் மாநிலத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீரர் இன்பராஜ்க்கு 7 மாதங்களுக்கு முன்பு...

உயர்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் 11 ம் வகுப்பு படித்த பழைய மாணவ, மாணவியர்களின் சந்திப்பு..

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு 11ஆம் வகுப்பு படித்த பழைய மாணவ, மாணவியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் தியாகு , இயக்குநர் அரவிந்தராஜ் உள்ளிட்ட 60 பேர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது தங்களுக்கு...

பா.ம.கவில் மூத்தவர்களை தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?.. அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி..

பா.ம.க.விற்காக அன்றுதொட்டு இன்றுவரை உழைத்து வரும் G.K.மணி, AK மூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் இருந்தும் அன்புமணி ராமதாஸ் தலைவரானது எப்படி? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். துரைமுருகனை ஏன் துணை முதலமைச்சராக்கவில்லை என அன்புமணி கேட்டிருந்த நிலையில் சிவசங்கர் இவ்வாறு...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு பெயர் மற்றும் டீசரும் வெளியீடு..

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக சூர்யா 44 படத்திற்கு ரெட்ரோ என்ற பெயிரிடப்பட்டு டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்....

கழுகின் மீது பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ் கருவி?.. கழுகின் நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை..

பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி பகுதிக்கு வந்த "பாரு" வகை கழுகின்காலில் பிளாஸ்டிக்கால் ஆன பட்டைகள், முதுகில் ஜி.பி.எஸ் கருவி போன்ற பொருள் பொருத்தப்பட்டிருந்தாக சந்தேகம் எழுப்பப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வீடு மீது அமர்ந்த கழுகை அப்பகுதி...

அரசு பேருந்து ஓட்டுனரின் அஜாக்கிரதையால் சாலையின் இருந்த மீடியேட்டரின் மீது மோதி விபத்து..

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாமகிரிப்பேட்டைக்கு சென்ற அரசுப்பேருந்து சாமுண்டி தியேட்டர் அருகே வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக மீடியேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது சாலையின் நடுவே பேருந்து நிற்பதாகக் கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டட இளைஞர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டார். ...

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை..

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை அடையாளம் தெரியாத சிலர் பாலியல் ரீதியாக சீண்டி தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வரும்...

திருச்செந்தூர் கோவிலில் ஆட்டம் போட்ட ரீல்ஸ் பிரபலம்.. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி நடனமாடியதாக பெண் மீது புகார்..

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்தாக இன்ஸ்டா பிரபலம் மீனவப் பொண்ணு சுபி என்ற சுபிக்சா மீது புகார் எழுந்துள்ளது. முருகன் கோவில் கடற்கரை, கிரி பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி...