​​
Polimer News
Polimer News Tamil.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் ...

நாளை வாக்கு எண்ணிக்கை..!

தமிழகத்தில் 2 கட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91...

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை மெரினாவில் திரண்டிருந்த மக்களிடையே, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டினார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்....

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..!

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியிருந்த நிலையில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் அங்கு திரண்டிருந்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தணையில்...

குடியுரிமை சட்டம் கொண்டுவர மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இல்லை - மத்திய சட்ட அமைச்சர்

குடியுரிமை தொடர்பாக சட்டம் கொண்டுவர மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை தொடர்பாக எந்த சட்டம் நிறைவேற்றவும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக விளக்கம் அளித்தார்....

9 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒன்பது வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் சில வாக்குச் சாவடிகளில், வாக்குச் சீட்டுகள் மாற்றி வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குச்...

புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே ஏராளமானோர் கோவில்களுக்கு குடும்பத்தினருடன் வந்து வழிபட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. புத்தாண்டை...

புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர் - பிரதமர் வாழ்த்து

2020 புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர்- பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க புத்தாண்டில் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். வலிமையான, வளமையான இந்தியாவை உருவாக்குவதற்கான...

இணையதளம் மூலம் குடியுரிமை வழங்க ஏற்பாடு?

குடியுரிமை திருத்த சட்டத்தை சில மாநிலங்கள் எதிர்ப்பதால், இணையதள நடைமுறையை அமல்படுத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அறிவித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம்...

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது. லம்புங் மாகாணத்தில் இருக்கும் அனக் ரகடவ் (Anak Krakatau) எரிமலை கடந்த ஆண்டு வெடித்து சிதறியபோது, கடலில் 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. இதில் 430 பேர் பலியாகினர். இந்நிலையில்...