​​
Polimer News
Polimer News Tamil.

2030ல் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு - உதயநிதி

தமிழகத்தில் 2 ஆயிரத்து 300ஆக இருந்த ஸ்டாட் அப் நிறுவனங்கள் 9 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் தா.மோ அன்பரசன், விரைவில் துணை முதல்வர் தலைமையில் ஸ்டாட் அப் திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் என்றார்.  சென்னை ஐ.ஐ.டி சார்பில்...

பாம்பன் சாலை பாலத்தில் போராட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்..!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகுகள் மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இணைந்து பாம்பன் சாலை பாலத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்ற போது தள்ளுமுள்ளு...

டைடல் பார்க் சிக்னல் அருகே கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம்..!

சென்னையில் டைடல் பார்க் சிக்னல் அருகே தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய யூ - டர்ன்...

" கொள்கை அடிப்படையில் தான் இணைய வேண்டும் என்ற அவசியமில்லை " - தமிழிசை சவுந்தரராஜன்

கொள்கைகளின் அடிப்படையில் தான் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவசியம் இல்லை, பொதுவான ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்று கூட ஒன்றிணையலாம் என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னை, மயிலாப்பூரில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத்...

தஞ்சையில் அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரம்..!

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நான்காம் வகுப்பு மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், அவர் டேப் ஒட்டவில்லை என மாணவி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. சக மாணவர் ஒருவர்...

இ.பி.எஸ் பண்பாடு இல்லாமல் பேசுகிறார் : முதலமைச்சர்

கலைஞர் கருணாநிதி பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாக எடப்பாடி பழனிசாமி பொங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத்...

பெண்ணை அடித்துக் கொன்று மூட்டையில் கட்டி வீசிய நபர் - போலீசார் விசாரணை

புதுச்சேரி வடுவகுப்பம் பகுதியில் கணவனைப் பிரிந்து தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து மூட்டையாக கட்டி விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே வீசிய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இளவரசி என்பவர் காணவில்லை என நெட்டப்பாக்கம்...

மழை காரணமாக இருப்பு வைக்கப்பட்ட சின்ன வெங்காயங்கள் அழுகின..

தேனி மாவட்டம்,போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக  பெய்த மழைகாரணமாக காற்றோட்டமாய் இருப்பு வைக்கப்பட்ட சின்ன  வெங்காயங்கள் முளைத்து அழுகும் நிலை ஏற்பட்டதால், கடும் விலைவீழ்ச்சி ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர் . 100க்கும் மேற்பட்ட ஏக்கர்களில்  பயிரிடப்பட்ட வெங்காயம் காற்றோட்டமான முறையில் ...

மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரம்..!

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மகப்பேறு மருத்துவர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் ஒருநாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கு கடந்த 6ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு சுவாசப்பிரச்சினை...

மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் வெற்றி..

மாலத்தீவில் நடைபெற்ற 15ஆவது உலக ஆணழகன் போட்டியில் கோப்பையை வென்று நாடு திரும்பிய நாமக்கல்லைச் சேர்ந்த சரவணன் மற்றும் பல்வேறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ,60 கிலோ எடை பிரிவில் சேலத்தை சேர்ந்த...