​​
Polimer News
Polimer News Tamil.

சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

கடவுள் முருகப்பெருமான் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்காரம் செய்தார் என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் ஏராளமானோர் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர். அப்போது, கீழ்வேளூர் அஞ்சு வட்டத்து அம்மன்...

திருட வந்து கிணற்றுக்குள் விழுந்த திருடன்..! உதவி செய்த ஹவுஸ் ஓனர்..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, விவசாயி ஒருவர் இரவில் வீட்டை பூட்டிவிட்டு முற்றத்தில் தூங்கியுள்ளார். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அவர் எழுந்தபோது, வீட்டின் கதவை ஒரு திருடன் திறக்க முயன்றதைப் பார்த்துள்ளார். உடனே, திருடன்.. திருடன் என அவர் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர்...

ஸ்பெயினில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய விமானப்படை

கடுமையான மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை இருப்பதை உணர்த்தும் வகையில் அந்நாட்டு விமானப்படையினர் ஒரு விமான மீட்புக்குழுவை அமைத்துள்ளனர். அக்குழுவினரின் 6 ஜெட் விமானங்கள் வானத்தில் சிவப்பு மஞ்சள் வண்ணப்பொடிகளைத் தூவி வேலன்சியா கொடியின் வர்ணத்தை வடிவமைத்து தங்கள்...

காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியா - கனடா இடையே வார்த்தை மோதல் அதிகரிப்பு

காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்திய தூதரக அதிகாரிகள் சிலர் கனடாவின் ஆடியோ மற்றும் வீடியோ கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், கனடாவுக்கு எதிராக இந்தியா சைபர்...

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தைக் காண 6 லட்சம் பேர் வருவார்கள் - அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற உள்ள சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் காண ஆறு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை திருவான்மியூரில் கந்த சஷ்டி பாராயணத்தைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய...

கோயமுத்தூரில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தனிப்படைகள் அமைத்து சோதனை

கோயமுத்தூரில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறையின் தனிப்படையினர் பீளமேடு சித்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முதல்தர கஞ்சா வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு...

மேற்குத் தொடர்ச்சி மலையில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 9 பேர் மீட்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில் பகுதி நீரோடையில் குளித்த 9 பேர், திடீர் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர் மழை காரணமாக நீரோடைப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வனத்...

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் சிறை, அபராதம்

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் யென் அபராதம் விதிக்கும் புதிய சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய போக்குவரத்து விதிகளின்படி, குடித்துவிட்டு சைக்கிள் ஓட்டினால், 3 ஆண்டு சிறை அல்லது...

"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..

புதிதாக கட்சி தொடங்கி, முதல் மாநில மாநாட்டை நடத்தியுள்ள நடிகர் விஜய் மீது சீமான் கடும் விமர்சனங்களை ஆவேசமாக முன் வைத்து வருகிறார். ஆனால், சீமானின் விமர்சனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு முன்பு...

கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...

போதைக்கு அடிமையாகி, திருட்டில் ஈடுபட்டு வந்த மகனை கண்டித்தும் கேட்காததால் உறவினர்களோடு சேர்ந்து தந்தையே கழுத்தை நெரித்து கொன்று விட்டு சடலத்தை தீ வைத்து எரித்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் பாதி எரிந்த...