​​
Polimer News
Polimer News Tamil.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் மண்சரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மண்ணுடன் சேர்ந்த மழைநீர் புகுந்து சேதம் ஏற்பட்டது. மேலும் மண்சரிவால் மரம் சாய்ந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், லாரி...

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில் சுவாமிநாத புரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்....

ஹெஸ்பொல்லா மூத்த நிர்வாகியை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்

ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவரை லெபானுக்குள் புகுந்து கைது செய்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. பேட்ரூனில் உள்ள அரசின் கப்பல் துறை பயிற்சி கல்லூரியில் அவர் தங்கியிருந்த நிலையில் கடல் வழியாக நகருக்குள் நுழைந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் துப்பாக்கி முனையில் அவரை...

மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக விவசாயி கைது

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தில் உயரழுத்த மின்சாரத்தை மின்வேலியில் இணைத்து யானையை கொன்றதாக விவசாயி கைது செய்யப்பட்டார். தனியார் கல்லூரி நிர்வாகம் அமைத்த மின்வேலியில் சிக்கி கடந்த 12 நாட்களுக்கு முன்பு மக்னா யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், மின்வேலியை...

கனமழையால் மானூத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், மானூத்து ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிலிருந்த வெளியேறிய தண்ணீர் அதன் அருகே சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது....

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் கந்த சஷ்டியையொட்டி நடைபெற்ற இலட்சார்ச்சனையில் ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர். பொது மற்றும் 100 ரூபாய் கட்டணத்தில் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து கோயிலுக்குள் சென்றனர். அதே நேரத்தில், முறைகேடாக மாற்று வழியில் சிலர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாக பக்தர்கள்...

மதுபோதையில் காவலரை தாக்கியதாக வழக்கறிஞர் உள்பட 4 பேர் கைது

சென்னையில், காவல்நிலையத்தில் வைத்து காவலரை தாக்கியதாக வழக்கறிஞர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பில் உள்ள பிரியாணி கடையில் சிலர் தகராறில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலில் இரவு ரோந்து போலீஸார் அங்கு சென்று காரில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர். அப்போது வாக்குவாதம்...

கந்த சஷ்டி 2ஆம் நாள் விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி இரண்டாம் நாள் திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கிய நிலையில், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்...

ராமேஸ்வரம் பகுதியில் இரவு முதல் காலை வரை பெய்த மழை

ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளில் இரவு முதல் காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. சாலையில் தேங்கிய மழைநீரால் ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி சென்றோர் சிரமத்திற்கு உள்ளாகினர்....

மாம்பழத்துறையாறு முழு கொள்ளளவை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் ஆணைக்கிடங்கில் உள்ள மாம்பழத்துறையாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவான 54 அடியை எட்டியது. நீர் தேக்கத்திற்கு வரும் 90 கன அடி உபரி நீரும் அப்படியே தூவலாறு வழியாக வள்ளியாற்றில் திறந்து...