​​
Polimer News
Polimer News Tamil.

அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் - டிரம்ப் உறுதி

அமெரிக்க அதிபராக தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை முன்னெப்போதையும்விட சிறப்பானதாகவும், துணிச்சலானதாகவும், பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவேன் என டிரம்ப் தெரிவித்தார். பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் என்று உறுதி அளித்தார். அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை தடுத்து...

மேட்டுப்பாளையம் - உதகை இடையே நவ.5 வரை ரயில் சேவை ரத்து

கனமழை காரணமாக கல்லாறு - குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையின் குறுக்கே பாறாங்கற்கள் விழுந்துள்ளதால், சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே 5-ஆம் தேதி வரை மலை ரயில் சேவை...

ஹெல்மெட்டுக்காக இளைஞரை மறித்த போக்குவரத்து போலீஸ்.. பரிதாபமாக பறிபோன உயிர்..! இந்த விபத்துக்கு யார் பொறுப்பு ?

சென்னை திருவொற்றியூர் - மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஸ்கூட்டரை வேகமாக திரும்பிய போது எதிரில் வந்த தண்ணீர் லாரிக்குள் சிக்கி இளைஞர் தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை மணலி...

ரயில் தண்டவாளத்தில் மாணவி தவறி விழுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி

கேரளா மாநிலம் கண்ணூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவி, நடைமேடைக்கும் ரயிலுக்கும் நடுவே தண்டவாளத்தில் தவறி விழுந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டார். புதுச்சேரியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து, தின்பண்டங்கள் வாங்குவதற்காக மாணவி இறங்கிச் சென்றுள்ளார். தின்பண்டம் வாங்குவதற்குள் புறப்பட்ட...

ஒருவர் மீது ஒருவர் சாணம் அடித்துக்கொள்ளும் விநோதத் திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியிலுள்ள கும்டாபுரம் கிராமத்தில், பீரேஸ்வரர் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக சாணியடித் திருவிழா நடைபெற்றது. சுவாமிக்கான பூஜை முடிந்ததும் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் வெற்று உடம்புடன், பசுவின் சாணத்தை உருண்டைகளாக்கி, ஒருவர் மீது ஒருவர்...

விஜய் தலைமையில் நடைபெற்ற த.வெ.க செயற்குழு கூட்டம்

அரசின் வருவாயை பெருக்க எந்தவொரு அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் மின்கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு என மக்கள் மீது அதிக சுமைகளை ஏற்றுவதாக தி.மு.க அரசுக்கு த.வெ.க செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு...

தி.மு.க. அரசின் பல துறைகளில் அதிக ஊழல் நடைபெறுகிறது - இ.பி.எஸ்.

தி.மு.க. அரசின் பல்வேறு துறைகளில் அதிமாக ஊழல் நடைபெறுவதாகவும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் முறையாக விசாரித்து யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் வீரப்பம்பாளையத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பேட்டியளித்த...

தட்டிக் கேட்ட இளைஞரை ரத்தம் வடிய வடிய தாக்கிய கும்பல்

கடலூர் மாவட்டம் பு.உடையூரில் சாலையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த 10 பேர் கும்பல், தங்களை கண்டித்த இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளது. காயமடைந்த இளைஞர் செல்லத்துரையின் உறவினர்கள் மற்றும் பா.ம.கவினர் விருத்தாச்சலம்- புவனகிரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6...

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் மண்சரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மண்ணுடன் சேர்ந்த மழைநீர் புகுந்து சேதம் ஏற்பட்டது. மேலும் மண்சரிவால் மரம் சாய்ந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், லாரி...

கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில் சுவாமிநாத புரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்....