​​
Polimer News
Polimer News Tamil.

பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள்...

பெட்ரோல், டீசல் விலையைக் 72 மணி நேரத்துக்குள் குறைக்காவிட்டால் கோட்டை முற்றுகை - அண்ணாமலை.!

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி 72 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, புதுச்சேரியிலும்...

குடியிருப்பு பகுதிக்குள் பதுங்கியிருந்த கரடிகள்... வெடிவைத்து வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்..!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் இரவு நேரத்தில் பதுங்கிய கரடிகளை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டினர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு, திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவ்வப்போது வனவிலங்குள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. ...

மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் - அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால  மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்....

தடைசெய்யப்பட்ட போதை மருந்தால் இருமல் டானிக்கை பறிமுதல் செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார்.!

மராட்டிய மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட போதை மருந்தால் தயாரிக்கப்பட்ட 864 கிலோ இருமல் டானிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். தானே மாநில தேசிய நெடுஞ்சாலை வழியாக மும்பை நோக்கி வந்த காரை அவர்கள் சோதனையிட்ட போது, கோடின் எனும் போதை...

காட்டுப்பகுதிகளில் பிளாஸ்டிக் டிரம்களில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு.!

மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளை வல்லுநர்கள் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து செயலிழக்க வைத்தனர். காட்டுப் பகுதியில் 15 பிளாஸ்டிக் டிரம்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் ஒரு சிலவற்றில் வெடிகுண்டுகள் இருப்பதை வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து...

குஜராத்தில் மருந்துத் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து.!

குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தில் மருந்துத் தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் கடுமையாகப் போராடினர். கலோல் என்னுமிடத்தில் உள்ள தொழிற்பேட்டையில் செயல்படும் மருந்து ஆலையில் தீப்பிடித்து மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கரும்புகையுடன் மூண்டெழுந்த தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்பு வீரர்கள்...

பெட்ரோல் டீசல் வரிக் குறைப்பு - தமிழக நிதியமைச்சர் கருத்து

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  2021 நவம்பரில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு...

வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்த கடைகளில் கைவரிசை.. பணம் திருடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!

சேலம் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. மல்லூரில் லதா என்பவரின்  இ-சேவை மையத்தில்  13 ஆயிரம் பணத்தையும்  மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு...

இஸ்ரேல் நாட்டிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து இஸ்ரேலிலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய ஐரோப்பாவுக்கு சென்று அங்கு குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்த்துவிட்டு திரும்பிய, 30 வயதுடைய நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு...