​​
Polimer News
Polimer News Tamil.

கடந்த 3 ஆண்டுகளில் 9600 தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்துள்ளனர் - அமித்ஷா!

அரசின் முயற்சியால் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்கள் 89 விழுக்காடு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் நாம்சாய் மாவட்டத்தில் அமித் ஷா, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணி முடிந்த திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு...

குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

குரூப்-2 தேர்வில் சில கேள்விகள் தவறாக இருந்ததாக தேர்வர்கள் சமூகவலைதளங்களில் தெரிவித்திருந்த நிலையில், தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டப்பின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்வில், சில கேள்விகளின் மொழிபெயர்ப்பு முறையாக இல்லை உள்ளிட்ட புகார்களை...

டி.ஜே நிகழ்ச்சியில் அதிகமாக மது மற்றும் போதை மருந்து அருந்திய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

சென்னை வி.ஆர்.மாலில் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை எடுத்துக் கொண்ட 23 வயது மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மயங்கிய நிலையில், அரசு இராஜுவ்காந்தி...

பெட்ரோல் பங்க் திறப்பு நிகழ்ச்சி… ஓபிஎஸ் வருவதற்குள் பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்ற மக்கள்... இடமே களேபரம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்ற புதிய பெட்ரோல் பங்க் திறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படவிருந்த பரிசுப் பொருட்களை அப்பகுதி மக்கள் போட்டிபோட்டுக் கொண்டு அள்ளிச் சென்றதால் அந்த இடமே களேபரமானது. பாலப்பாடி கிராமத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்...

டிரம்முக்குள் வைத்து புதைக்கப்பட்ட முதியவர் உடல் தோண்டியெடுப்பு.!

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் டிரம்முக்குள் வைத்து புதைக்கப்பட்ட முதியவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. சொத்துத் தகராறில் சென்னையைச் சேர்ந்த முதியவர் குமரேசன் என்பவரை அவரது மகன் குணசேகரன் என்பவனே கொடூரமாகக் கொன்று டிரம்முக்குள் அடைத்து, காவேரிப்பாக்கம் கொண்டு வந்து...

கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதிய அரசு பேருந்து.. ஓட்டுநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. குமாரபாளையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்ற அரசுப் பேருந்தை சாமிநாதன் என்பவர் ஓட்டிச்சென்றார். அப்பேருந்து பள்ளிபாளையம் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே இருந்த தடுப்பு மீது...

மதுரையில் நகை வாங்குவது போல் சென்று நகைக்கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிய நபர் கைது.!

மதுரையில் நகை வாங்குவது போல் சென்று நகைக்கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி வந்தவனை போலீசார் கைது செய்தனர். 2 நாட்களுக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் பேச்சுக்கொடுத்து ஊழியரை திசை திருப்பி ஒருவன் நகை...

பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்கள்...

பெட்ரோல், டீசல் விலையைக் 72 மணி நேரத்துக்குள் குறைக்காவிட்டால் கோட்டை முற்றுகை - அண்ணாமலை.!

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி 72 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, புதுச்சேரியிலும்...

குடியிருப்பு பகுதிக்குள் பதுங்கியிருந்த கரடிகள்... வெடிவைத்து வனப்பகுதிக்குள் விரட்டிய வனத்துறையினர்..!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் இரவு நேரத்தில் பதுங்கிய கரடிகளை வனத்துறையினர் வெடி வைத்து விரட்டினர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு, திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவ்வப்போது வனவிலங்குள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. ...