​​
Polimer News
Polimer News Tamil.

அமெரிக்க வீரர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டும், செல்பி எடுத்தும் மகிழ்ந்த அதிபர் ஜோ பைடன்.!

ஜப்பான் செல்வதற்கு முன் தென் கொரிய நாட்டு விமானப்படை தளத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டும், செல்பி எடுத்தும் பொழுது போக்கினார். முன்னதாக தென் கொரிய அதிபர் யூன் சுக்குடன் இணைந்து அந்நாட்டு...

டெல்லி குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்தும் முடிவு எதையும் எடுக்கவில்லை - மத்தியப் பண்பாட்டுத் துறை அமைச்சர்

டெல்லி குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்தும் முடிவு எதையும் எடுக்கவில்லை என மத்தியப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி தெரிவித்துள்ளார். 238 அடி உயரமுள்ள குதுப் மினாரை விஷ்ணுத் தம்பம் என்றும், அந்த வளாகத்தில் இந்துக் கடவுள்கள் சிலை காணப்படுவதாகவும் பல்வேறு...

அதிபரை அவமானப்படுத்தும் விதமாக ட்வீட் போட்ட எதிர்கட்சி பெண் தலைவருக்கு சிறை... கொதித்தெழுந்து மக்கள் பேரணி.!

துருக்கியில், எதிர்கட்சி பெண் தலைவர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதிபர் எர்டோகனை அவமானப்படுத்தும் விதமாக டுவிட்டரில் பதிவிட்ட கனான் கஃப்டான்சியோகுளு-விற்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. இதனை...

இத்தாலி கண்ணாடியை கழற்றிவிட்டு பாஜக செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை பாருங்கள்... ராகுல்காந்திக்கு அமித்ஷா பதில்.!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இத்தாலி கண்ணாடியை கழற்றிவிட்டு பாஜக அரசு செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை பார்க்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நம்சாய் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்து...

மே 24ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை... கல்லணையில் முழு வீச்சில் நடைபெறும் பராமரிப்புப் பணி..!

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கடைமடை பகுதி வரை தண்ணீர் எளிதாக வெளியேற வசதியாக கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு,...

2 நாள் பயணமாக ஜப்பான் செல்லும் மோடி.. குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்.!

குவாட் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பரஸ்பர நலன்கள் தொடர்பாக தலைவர்களுடன் விவாதிக்க அந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள குவாட்...

மேகாலயாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த சட்டமன்ற கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து..!

மேகாலயாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த சட்டமன்ற கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 70 டன் எடை கொண்ட மாடத்தின் பாரத்தை தாங்க முடியாமல், கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 177 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு...

நீண்ட இடைவேளைக்கு பிறகு சுரங்கப்பாதைகளில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் கார்கீவ் மக்கள்.!

ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைனின் கார்கீவில் ரயில் சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றின் சுரங்கப்பாதையில் கடந்த 2 மாதங்களாக பதுங்கி இருந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்கீவில் கடந்த வாரம்...

சட்டவிரோதமாக நடந்த DJ பார்ட்டியில் இளைஞர் பலி... வி.ஆர் மாலில் உள்ள Monkey பாருக்கு சீல்

சென்னை வி.ஆர். மாலில் உரிய அனுமதியின்றி நடந்த இசை நிகழ்ச்சியில் மது மற்றும் போதை மருந்துகளை எடுத்துக் கொண்டதாக கூறப்படும் மென்பொருள் நிறுவன ஊழியர் உயிரிழந்த நிலையில், மதுக்கூட மேலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரவீன் என்பவர் டி.ஜே நிகழ்ச்சியில் பங்கேற்றதை...

தண்ணீர் பாட்டிலுக்குள் மிதந்த செத்த பல்லி... ஆசை பாட்டிலில் அதிர்ச்சி... கோவில் வளாகத்தில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சையைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக வந்துள்ளார். கோவில் வளாகத்தில் சிறுவன்...