​​
Polimer News
Polimer News Tamil.

புதுடெல்லியில் வீட்டை விஷவாயு கிடங்காக மாற்றி, தாய், 2 மகள்கள் தற்கொலை.!

புதுடெல்லியில், வீட்டையே விஷவாயு கிடங்காக மாற்றி, 2 மகள்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்மணி, உடல்களை மீட்க வரும் போலீசார் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எழுதி வைத்த கடிதம் சிக்கியது. கடந்த ஆண்டு கொரோனாவால் கணவனை இழந்து, நோய் வாய்பட்டிருந்த...

"ஓசியில வந்துகிட்டு ரூல்ஸ் பேசுறியா ?" - ஆவேசம் காட்டும் நடத்துநர்

அரியலூரில் இலவச பேருந்து அனுமதிச் சீட்டுடன் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவிகளை கீழே இறங்குமாறு தரக்குறைவாகப் பேசி நடத்துநர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்துகளில் அரசின் இலவச பேருந்து...

இந்தியாவிலேயே குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்கும் மாநிலம் இது தான்.?

அசாமில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்ததால் இந்தியாவிலேயே குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் விற்கும் மாநிலம் எனப் பெயர் பெற்றுள்ளது. இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா நாட்டின் முதன்மையான...

இலங்கை துறைமுகம் சென்றடைந்தது தமிழ்நாடு அரசின் நிவாரண பொருட்கள்.!

தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் இலங்கை சென்றடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதியன்று, 9 ஆயிரம் டன் அரிசி,...

கேரளாவில் தனியார் பேருந்தும், டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே தனியார் சொகுசு பேருந்தும், டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தது குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவல்லாவில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, பாலக்காடு அடுத்த...

ஆரணியில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு.!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார். இதேபோல், 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இளைஞர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்....

விரைவில், உலகத்தின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும் - ராஜ்நாத்சிங்

விரைவில், உலகத்தின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்குச் சென்ற அவர், ராணுவ அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர்  பேசிய அவர், பாதுகாப்புத்துறையில் நமது...

அமெரிக்க வீரர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டும், செல்பி எடுத்தும் மகிழ்ந்த அதிபர் ஜோ பைடன்.!

ஜப்பான் செல்வதற்கு முன் தென் கொரிய நாட்டு விமானப்படை தளத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டும், செல்பி எடுத்தும் பொழுது போக்கினார். முன்னதாக தென் கொரிய அதிபர் யூன் சுக்குடன் இணைந்து அந்நாட்டு...

டெல்லி குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்தும் முடிவு எதையும் எடுக்கவில்லை - மத்தியப் பண்பாட்டுத் துறை அமைச்சர்

டெல்லி குதுப்மினார் வளாகத்தில் அகழாய்வு நடத்தும் முடிவு எதையும் எடுக்கவில்லை என மத்தியப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி தெரிவித்துள்ளார். 238 அடி உயரமுள்ள குதுப் மினாரை விஷ்ணுத் தம்பம் என்றும், அந்த வளாகத்தில் இந்துக் கடவுள்கள் சிலை காணப்படுவதாகவும் பல்வேறு...

அதிபரை அவமானப்படுத்தும் விதமாக ட்வீட் போட்ட எதிர்கட்சி பெண் தலைவருக்கு சிறை... கொதித்தெழுந்து மக்கள் பேரணி.!

துருக்கியில், எதிர்கட்சி பெண் தலைவர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அதிபர் எர்டோகனை அவமானப்படுத்தும் விதமாக டுவிட்டரில் பதிவிட்ட கனான் கஃப்டான்சியோகுளு-விற்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. இதனை...