​​
Polimer News
Polimer News Tamil.

பிரதமர் மோடி -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திப்பு

குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்துள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்க உள்ள இந்தோ பசிபிக் பொருளாதார திட்டத்தில் பங்கேற்க உள்ளார்.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர்...

கார் மேல் ஸ்டாண்டிங்கில் வந்தவருக்கு எண்ட் கார்டு... ஹீரோ என நினைத்தவரை பஞ்சராக்கிய போலீஸ்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பாணியில் 2 கார்கள் மீது நின்றபடி பயணித்த உத்தர பிரதேச மாநில இளைஞரை கைது செய்த போலீசார், இதற்காக அவர் பயன்படுத்திய 2 டொயோட்டா பார்சூனர் கார்களை பறிமுதல் செய்தனர். நொய்டாவை சேர்ந்த ராஜீவ் என்ற அந்த...

4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்துள்ளார். கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில், இளம் வீரர்கள் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்...

மன்னார்குடியில் ONGC குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருவதால் விவசாய நிலங்கள் பாதிப்பு.!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ONGC குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி வருவதால் சுமார் 3 ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கருப்புகிளார் என்ற கிராமத்தில் சுப்பிரமணியன் என்ற விவசாயிக்குச் சொந்தமான நிலம் வழியே செல்லும் ONGC...

பட்டிணப்பிரவேசம் அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா - தருமபுரம் ஆதீனம்

பட்டிணப்பிரவேச நிகழ்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா என்றும் இந்த விழா தொடர்ந்து நடைபெற வேண்டும் என பக்தர்கள் விரும்புவதாகவும் தருமபுர ஆதீனம் தெரிவித்துள்ளார். புவி வெப்பமயமாதலை தடுக்க 27,000 மரக்கன்றுகள் நடப்படும் என தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ...

கல்குவாரி இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாமல் உள்ள 6ஆவது நபரின் உடல் கண்டறியப்பட்டது.!

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 6வது தொழிலாளியின் உடல் கண்டறியப்பட்ட நிலையில், உடலை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் முழு வீச்சில் ஈடுபட்டனர். அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர்...

காவல்நிலையத்துக்குத் தீவைத்த 5 குடும்பத்தினரின் 5 வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகத்தினர்.!

அசாமின் நாகானில் காவல்நிலையத்துக்குத் தீவைத்த 5 குடும்பத்தினரின் 5 வீடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர். விசாரணைக்கு அழைத்து வந்தவர் மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் நேற்றுக் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கித் தீவைத்துக் கொளுத்தினர். இந்த நிகழ்வில்...

புதுடெல்லியில் வீட்டை விஷவாயு கிடங்காக மாற்றி, தாய், 2 மகள்கள் தற்கொலை.!

புதுடெல்லியில், வீட்டையே விஷவாயு கிடங்காக மாற்றி, 2 மகள்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட பெண்மணி, உடல்களை மீட்க வரும் போலீசார் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எழுதி வைத்த கடிதம் சிக்கியது. கடந்த ஆண்டு கொரோனாவால் கணவனை இழந்து, நோய் வாய்பட்டிருந்த...

"ஓசியில வந்துகிட்டு ரூல்ஸ் பேசுறியா ?" - ஆவேசம் காட்டும் நடத்துநர்

அரியலூரில் இலவச பேருந்து அனுமதிச் சீட்டுடன் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவிகளை கீழே இறங்குமாறு தரக்குறைவாகப் பேசி நடத்துநர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்துகளில் அரசின் இலவச பேருந்து...

இந்தியாவிலேயே குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்கும் மாநிலம் இது தான்.?

அசாமில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்ததால் இந்தியாவிலேயே குறைந்த விலையில் பெட்ரோல் டீசல் விற்கும் மாநிலம் எனப் பெயர் பெற்றுள்ளது. இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா நாட்டின் முதன்மையான...