​​
Polimer News
Polimer News Tamil.

ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஹொன்ஷூவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!

ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஹொன்ஷூவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 17 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சேத விவரங்கள்...

திரைப்பட பாடகி சங்கீதா சஜித் காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய திரைப்பட பின்ணணி பாடகி சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 46. சிறுநீரகம் தொடர்பான சிகிச்சை பெற்று வந்த அவர் தமது சகோதரியின் இல்லத்தில் காலமானார். சங்கீதா சஜித்தின் இறுதிச்சடங்குகள் இன்று...

அமெரிக்காவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று 2 வதாக வந்து வெற்றி கோட்டை தொட்ட நபர் திடீர் உயிரிழப்பு.!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற  Brooklyn Half Marathon போட்டியில் இரண்டாவதாக வந்து வெற்றி பெற்ற நபர் வெற்றிக் கோட்டை தொட்ட நிலையில்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த நபர் உயிரிழந்ததற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் போட்டியில்15க்கும்...

இத்தாலியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் - இத்தாலிய வீரர் வெற்றி

இத்தாலியில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில், 15-ஆவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த Giulio Ciccone முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். Rivarolo Canavese-ல் இருந்து Cogne வரை சுமார் 177 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்த சைக்கிள் பந்தயத்தில், ஏராளமான சைக்கிள் வீரர்கள் ஆர்வமுடன்...

மும்பையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தின் மாடியில் பயங்கர தீ விபத்து

மும்பையில் உள்ள வோர்லியின் ஹேப்பி ஹோம் பார்வையற்றோர் இல்லத்தின் வளாகத்தில்,  மூன்றாவது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 தீயணைப்பு வாகனங்கள் சென்ற வீரர்கள் தீயை அணைப்பதிலும் கட்டடத்தில் உள்ளவர்களை வெளியேற்றுவதிலும் ஈடுபட்டு, அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர்.   உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று...

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.!

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத்ததில் இந்தியாவின் பணவீக்கம் 17 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகரித்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை...

உத்தரபிரதேசத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி.!

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த...

உலக சுகாதார அமைப்பின் விருது - 10 லட்சம் இந்திய ‘ஆஷா’ பெண் ஊழியர்களுக்கு கௌரவம்!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபட்ட 10 லட்சம் ‘ஆஷா’ பெண் ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது . உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு, ஜெனீவாவில் நடைபெற்றது. அதன்  தொடக்க அமர்வில் நேற்று விருதுகள் வழங்கும் விழா நடந்தது....

இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

சென்னையில் ஹெல்மெட்' சோதனை இன்று முதல் தீவிரமாகிறது. இருசக்கர வாகனத்தின் பின்னால் அமருவோரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், போலீசார் எச்சரித்துள்ளனர். விபத்தில் சிக்குவோரில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின் இருக்கையில்...

பஞ்சாபில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு.!

பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ஹோஷியார்பூர் அருகே கியாலா கிராமத்தில் வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை, சில தெரு நாய்கள் துரத்தியதால்...