​​
Polimer News
Polimer News Tamil.

போலீஸ் தாக்குதலில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு..!

பிரேசிலில், கருப்பினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு போலீசாரால் கொல்லப்பட்ட நிகழ்வு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் அம்பாஉபா நகரில், ஜீசஸ் சாண்டோஸ் (Genivaldo de Jesus Santos) என்ற கருப்பினத்தைச் சேர்ந்த நபரை, பெடரல் போலீசார் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சாண்டோஸ் மீது...

டெல்லி கலவர வழக்கு-பரோலில் வெளி வந்த குற்றவாளியை கைகுலுக்கி வரவேற்ற மக்கள்

பரோலில் வெளிவந்த டெல்லி கலவர வழக்கு குற்றவாளி ஷாருக் பதானிற்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தின் போது, போலீசாரை துப்பாக்கியால் மிரட்டியது உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட...

பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு மாட்டிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்பு

தஞ்சை மாவட்டம் இரும்புதலை அருகே பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு மாட்டிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்கப்பட்டது. சாலையில் பல நாட்களாக தெரு நாய் ஒன்று, பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கிக்கொண்ட நிலையில் சுற்றித்திரிந்ததாக வனவிலங்கு பாதுகாப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த...

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் மே 31 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்...

அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 பேருக்கு பாதிப்பு உறுதி..!

உலகளவில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 118 பேருக்கு இந்நோய் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

தமிழ்நாட்டுப் பயணம் மறக்க முடியாதது.. தமிழ்நாட்டுக்கு நன்றி-பிரதமர் மோடி

தமிழ்நாட்டுப் பயணம் மறக்க முடியாதது என்றும், தமிழ்நாட்டுக்கு நன்றி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்றுச் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி பணி நிறைவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிகளின் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளதுடன் தமிழ்நாட்டுக்கு...

பொருளாதார மந்தநிலை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு நீடிக்கும்-எலான் மஸ்க்

உலக பொருளாதார மந்தநிலை, அடுத்த 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகளவில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை குறித்த டிவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்,...

மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்தது.. அணைக்கு வந்த நீரை மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்றனர்..!

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்துசேர்ந்த காவிரி நீரை விவசாயிகள் நெல்மணிகள், மலர் தூவி வரவேற்றனர். குறுவை நெல் பயிரிடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த நீர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்கள்...

ஆஸ்திரேலியாவில் சூழ்ந்துள்ள கடுமையான மூடுபனியில் மறை கட்டிடங்கள்

ஆஸ்திரேலியாவில் சூழ்ந்துள்ள கடுமையான மூடுபனியினால், கட்டிடங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் சிட்னி நகரில் உள்ள கட்டிடங்கள்  அடையாளம் தெரியாத அளவிற்கு அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டது. படகு சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில்,சாலை போக்குவரத்து வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சிட்னி துறைமுகப்...

பர்தா அணிந்து வந்த பெண்கள் கடை ஊழியரை திசைத் திருப்பி கவரிங் நகையை வைத்து தங்க செயின் திருட்டு..!

தஞ்சையில் இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தென்கீழ் அலங்கம் பகுதியில் உள்ள நகைக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் , செயின் வாங்குவது போல் கடை ஊழியரிடம் பேச்சுக்கொடுத்து திசைத்திருப்பி,...