​​
Polimer News
Polimer News Tamil.

பொருளாதார மந்தநிலை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு நீடிக்கும்-எலான் மஸ்க்

உலக பொருளாதார மந்தநிலை, அடுத்த 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும் என டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகளவில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை குறித்த டிவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்,...

மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்தது.. அணைக்கு வந்த நீரை மலர்கள் தூவி விவசாயிகள் வரவேற்றனர்..!

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்துசேர்ந்த காவிரி நீரை விவசாயிகள் நெல்மணிகள், மலர் தூவி வரவேற்றனர். குறுவை நெல் பயிரிடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த நீர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்கள்...

ஆஸ்திரேலியாவில் சூழ்ந்துள்ள கடுமையான மூடுபனியில் மறை கட்டிடங்கள்

ஆஸ்திரேலியாவில் சூழ்ந்துள்ள கடுமையான மூடுபனியினால், கட்டிடங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் சிட்னி நகரில் உள்ள கட்டிடங்கள்  அடையாளம் தெரியாத அளவிற்கு அடர்ந்த மூடுபனியால் சூழப்பட்டது. படகு சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில்,சாலை போக்குவரத்து வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சிட்னி துறைமுகப்...

பர்தா அணிந்து வந்த பெண்கள் கடை ஊழியரை திசைத் திருப்பி கவரிங் நகையை வைத்து தங்க செயின் திருட்டு..!

தஞ்சையில் இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தென்கீழ் அலங்கம் பகுதியில் உள்ள நகைக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் , செயின் வாங்குவது போல் கடை ஊழியரிடம் பேச்சுக்கொடுத்து திசைத்திருப்பி,...

கடைகோடி வரை திட்டங்களின் பயன்.. தொழில் நுட்பத்தால் சாதிக்கும் அரசு..!

நவீன தொழில் நுட்பங்களின் மூலம் அரசு திட்டங்களின் பயன் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இரு நாட்கள் நடைபெறும் தேசிய டிரோன் மகா உற்சவத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டிரோன் தொழில்...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. யானை பயத்தால் தேர்வு எழுத செல்லாத 10ஆம் வகுப்பு மாணவிகள்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யானை முற்றுகையிட்ட அச்சத்தால் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் பொதுத்தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓவேலி ஆரூற்றுபாறை பகுதியில் உள்ள குடியிருப்பை நேற்று முற்றுகையிட்ட காட்டு யானை, ஆனந்தன் என்பவரை தாக்கியதில் அவர் சம்பவ...

மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. 2 வடமாநில இளைஞர்கள் பெண்ணை கொலை செய்தது உறுதி.!

ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 வடமாநில இளைஞர்கள் பெண்ணை கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பிரகாஷ் மற்றும்...

மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் பயணம் துவக்கம்.. உற்சாகமாக பயணம் மேற்கொண்ட பயணிகள்..!

மதுரை - தேனி ரயில் நிலையங்களுக்கிடையே அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் ரயில் பயணம் இன்று தொடங்கியுள்ளது. ரயில் நிலையங்களுக்கிடையே 75 கி.மீ தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் இருந்த படி திட்டத்தை பிரதமர்...

"நான் ஊதமாட்டேன்... என் டிரைவர் வந்து ஊதுவான்" மதுபோதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்.!

சென்னை மெரினா கடற்கரை அருகே, நள்ளிரவில் மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் நபர், ப்ரீத் அனலைசர் கருவியை ஊத முடியாது எனக்கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காமராஜர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை மறித்து...

டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் வைத்தும் மக்கள் கண்ணீர் அஞ்சலி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்காக அனுசரிக்கப்பட்ட நினைவேந்தலில் மக்கள் கண்ணீருடன் பங்கேற்றனர். அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியைகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சிலுவைகள் அருகே மலர்களை வைத்தும், மெழுகு வர்த்தி ஏற்றியும்...