​​
Polimer News
Polimer News Tamil.

மேற்கு வங்கத்தில் மம்தா அரசைக் கலைக்கும் எண்ணம் இல்லை - அமைச்சர் அமித் ஷா

மேற்கு வங்க அரசைக் கலைக்கும் திட்டமில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது முறையாகாது என்றும் அவர் கூறினார். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் சவால்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் அமித் ஷா கூறினார். கொல்கத்தாவுக்குப்...

சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் 2 போலீசார் கைது..!

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமைச் செயலக காலனி காவல்நிலைய போலீசாரின் விசாரணைக்கு சென்ற விக்னேஷ், கடந்த 19ஆம் தேதி மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

ஒடிசா வானிலை மையம் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதையடுத்து 18 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை செவ்வாய்க்கிழமைக்குள் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை நோக்கி நகர்வதாக...

முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டிஜிசிஏ எச்சரிக்கை!

முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்ல மறுக்கும் விமான நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதித்தும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்த பின்னரும் சில பயணிகளை...

நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகளிடையே சண்டை… வெளியான வீடியோ

நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் ஒருவரை ஒருவர் கட்டி சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெதர்லாந்து நோக்கி பறந்து கொண்டு இருந்த விமானத்தில் நிறவெறியை தூண்டும் கருத்து தெரிவித்ததாக இரு பிரிவினர் இடையே சண்டை மூண்டது. நடுவானில் பறந்த விமானத்தில்...

தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பா விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த விசாரணைக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  அரசுத் தரப்பில் அவகாசம் கோரி மீண்டும் மீண்டும்...

நட்சத்திர விடுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து: 18 பேர் பலி...64 பேர் படுகாயங்களுடன் மீட்பு!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிவிபத்தால் கட்டடத்தின் முன்பகுதி உருக்குலைந்தது. தூக்கி வீசப்பட்ட கட்டடத்தின் சிமெண்ட் கற்கள் சாலையில் சென்ற பேருந்து மற்றும் கார்கள் மீது விழுந்து சேதத்தை...

ரூ.1000-ஐ தாண்டியது வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை

ரூ.1000-ஐ தாண்டியது கியாஸ் சிலிண்டர் விலை வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு சென்னையில் சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை 965 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் 50 ரூபாய் உயர்ந்து ரூ.1,015-க்கு விற்பனை...

ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவ 200 தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்!

ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவ சுமார் 200 தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எல்லைக்கு அருகே சுமார் 35 தீவிரவாத முகாம்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதிகள்...

4 மாடி கட்டடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து... 2 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் மேட்ரிட் நகரில் 4 மாடி கட்டடத்தில் பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்த நிலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. 2 ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் அருகில் இருந்த...