​​
Polimer News
Polimer News Tamil.

1000 ஏக்கர் நிலம் கோரும் ஓலா நிறுவனம்..!

ஓலா நிறுவனம் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், மின்சார கார், பேட்டரி தொழிற்சாலைகளை அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலம் கோரித் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களிடம் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாநிலத்தில் தொழிற்சாலை அமையும் என்பது அடுத்த மாதத்தில்...

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 7 வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். பர்தார்பூரில் உள்ள முகாமில் இருந்து பாதுகாப்பு பணிக்காக 26 வீரர்களுடன் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி அளவில் அந்த வாகனம் தோய்ஸ்...

அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கில் அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த சவுதாலா, வருமானத்திற்கு அதிகமாக 6 கோடி ரூபாய்...

டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூடு-மனைவி இறந்த 2வது நாளே கணவனும் மாரடைப்பால் உயிரிழப்பு

அமெரிக்காவில், டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஆசிரியை ஒருவரின் கணவர், மனைவி உயிரிழந்த இரண்டாவது நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். செவ்வாய்கிழமை டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்குள் புகுந்த 18 வயது இளைஞர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். அப்போது வகுப்பறையில்...

சாலை தடுப்பில் மோதிய பைக்கில் இருந்து கீழே விழுந்த வடமாநில இளைஞர்.. லாரி ஏறியதால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி..

சென்னை அடுத்த அம்பத்தூரில், சாலை தடுப்பில் மோதிய இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த வடமாநில இளைஞர், அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லொலன் ராணா, அம்பத்தூரில் பணியாற்றி வந்துள்ளார். நண்பருடன் பெட்ரோல் பங்க் வந்த அவர்,...

பழனியில் 3 நாட்கள் தேசிய அளவிலான நாணய கண்காட்சி

பழனியில் தேசிய அளவிலான பழைய நாணயங்களின் கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை பொள்ளாச்சி, கோவை, சேலம் ஆகிய நாணய சங்கங்கள் இணைந்து நடத்தி வருகிறது. இந்த கண்காட்சியில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கால...

நெடுஞ்சாலையில் இரு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய கார்-4 வயது சிறுவன் பலி

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் ஒன்று எதிரெதிரே வந்த இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய விபத்தில், 4 வயது சிறுவன் உயிரிழந்தார். பிரஸ்காலணி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் தனது பேரன்கள் மூவருடன் கோடை விடுமுறையை கொண்டாட மலம்புழா சென்றுவிட்டு காரில் வீடு...

போலீஸ் தாக்குதலில் கருப்பினத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு..!

பிரேசிலில், கருப்பினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு போலீசாரால் கொல்லப்பட்ட நிகழ்வு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் அம்பாஉபா நகரில், ஜீசஸ் சாண்டோஸ் (Genivaldo de Jesus Santos) என்ற கருப்பினத்தைச் சேர்ந்த நபரை, பெடரல் போலீசார் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சாண்டோஸ் மீது...

டெல்லி கலவர வழக்கு-பரோலில் வெளி வந்த குற்றவாளியை கைகுலுக்கி வரவேற்ற மக்கள்

பரோலில் வெளிவந்த டெல்லி கலவர வழக்கு குற்றவாளி ஷாருக் பதானிற்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்தின் போது, போலீசாரை துப்பாக்கியால் மிரட்டியது உள்ளிட்ட பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட...

பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு மாட்டிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்பு

தஞ்சை மாவட்டம் இரும்புதலை அருகே பிளாஸ்டிக் குடத்தினுள் தலையை விட்டு மாட்டிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்கப்பட்டது. சாலையில் பல நாட்களாக தெரு நாய் ஒன்று, பிளாஸ்டிக் குடத்திற்குள் தலை சிக்கிக்கொண்ட நிலையில் சுற்றித்திரிந்ததாக வனவிலங்கு பாதுகாப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த...