​​
Polimer News
Polimer News Tamil.

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் ; இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம்

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து...

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வருகிறது பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு வரும் திங்கட்கிழமை இந்தியா வரும் நிலையில், நீர் மின் நிலையங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவிலிருந்து...

முன்விரோதத்தால் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ரௌடி.. 9 பேர் கைது

சென்னை அம்பத்தூரில் முன்விரோதத்தில் ரௌடி ஒருவனை சக ரௌடிகள் விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. 25 வயதான உதயகுமார் தனது தாயை பார்ப்பதற்காக சண்முகபுரம் வந்த போது அவரை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டிக்...

இந்தோனேஷியாவில் 43 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 26 பேர் மாயம்..

இந்தோனேஷியாவில் 43 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 26 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் உள்ள பாடெரே துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட படகில் எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து...

இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது ரஷ்யா

1,000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஏவுகணை, வெண்கடல் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை...

திட்டங்களின் முழு பயன்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் - பிரதமர் மோடி

அரசு திட்டங்களின் பயன்கள் நூறு சதவிகிதம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் அட்கோட்டில் மாதுஸ்ரீ கேடிபி மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசின்...

பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்க தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த விஏஓ தற்காலிக பணியிடை நீக்கம்

தருமபுரி அருகே பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்க தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த விஏஓ-வை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரூர் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். சில்லாரஹள்ளி விஏஓ வாக பணியாற்றி வந்த பரமசிவம் என்பவரும், உதவியாளர் ஜெயந்தியும் சேர்ந்து பிறப்பு, இறப்பு உள்ளிட்ட அனைத்து...

உக்ரைன் நெருக்கடியால் உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 220 மில்லியனாக அதிகரிக்கும் - ஐக்கிய நாடுகள் சபை

உக்ரைன் நெருக்கடியால் உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 220 மில்லியனாக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு 53 நாடுகளில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 200...

தோல் மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகைகள், பணம் திருடிய உதவியாளர்..

ஈரோட்டில் தோல் மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அவரது உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெருந்துறை சாலை பகுதியில் வசித்து வரும் மருத்துவர் விஷ்ணு தீபக், தனது வீட்டின் அருகே மருத்துவமனை வைத்துள்ளார். அவர்...

மனைவி மற்றும் 2 பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை

சென்னை அடுத்த பொழிச்சலூரில் மனைவி மற்றும் 2 பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஐடி ஊழியரான பிரகாஷ், நேற்று அவரது...