​​
Polimer News
Polimer News Tamil.

தேசிய நெடுஞ்சாலையில் காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் ஜெகன், ஜெகதீஷ், மகேஷ் ஆகிய 3...

அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!

ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக், அதிபரின் உத்தரவின் பேரில் அசோவ்ஸ்டலில் இருந்து மக்களை...

வைணவத் திருத்தலமான பத்ரிநாத் கோவில் திறப்பு...இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி.!

உத்தரகாண்ட் மாநிலத்தின் வைணவத் திருத்தலமான பத்ரிநாத் கோவிலின் கதவுகள் இன்று பக்தர்களுக்காகத் திறந்து விடப்பட்டன. பனிக்காலங்களில் பல மாதங்கள் மூடப்பட்டு கோடைக் காலத்தை முன்னிட்டு கோவில் திறக்கப்படுவதால் வளாகம் மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருமாலின் வழிபாட்டுத் தலம் தான் பத்ரிநாத். அசம்பாவிதங்கள்...

உக்ரைன் அதிபருடன் காணொலி வாயிலாக ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை.!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் காணொலி வாயிலாக ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று கலந்துரையாடுகின்றனர். இதனை அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான யுத்தம் முடிவே இல்லாமல் நீண்டு வரும் நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி,...

பட்டணப்பிரவேசத்தை நடத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தருமபுர ஆதீனம் பேட்டி.!

பட்டணபிரவேசம் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அவரவர் பல்லக்கை சுமப்பதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறினார். பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருவதாகவும்...

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை பிரதான வாயிலில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு

இமாச்சலப் பிரதேசச் சட்டமன்றத்தின் வாயிற்கதவு, மதிற்சுவர் ஆகியவற்றில் காலிஸ்தான் கொடிகளைக் கட்டியது குறித்து விசாரித்துக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். தர்மசாலாவில் உள்ள சட்டமன்றக் கட்டடத்தின் வாயிற்கதவு, மதில் ஆகியவற்றில் காலிஸ்தான் கொடிகள் கட்டியதை அறிந்த காவல்துறையினர்...

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது அசானி புயல்..!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் அசானி புயல் மே 10ஆம் நாள் மாலை வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரைப் பகுதியை அடையும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை ஐந்தரை மணியளவில் புயல் விசாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 970 கிலோமீட்டர் தொலைவிலும்,...

குடியரசுத் தலைவர் தேர்தல்: கூட்டணிக் கட்சியினருடன் பாஜக முக்கிய ஆலோசனை.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பாஜக தனது கூட்டணிக் கட்சியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசினார். சுமார்...

மருத்துவர்கள் மீது தாக்குதல், பொய் வழக்குகள்.. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வேதனை..!

மருத்துவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்களைக் கண்டு வேதனைப்படுவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களின் சேவைக்கு தமது மரியாதையை செலுத்துவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், மருத்துவர்கள் நமது நண்பர்கள் என்றும்,...

எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்து : 32 பேர் பலி.. மீட்புப் பணி நீடிப்பு..!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர விடுதியில், எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கட்டிட இடிபாட்டுகளில் சிக்கி 19 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமையான Saratoga நட்சத்திர விடுதியில், எரிவாயு செல்லும்...