​​
Polimer News
Polimer News Tamil.

ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

கோவையில் பிரபல ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் இரண்டாம் நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 8 ஹோட்டல்கள், 5 வீடுகள், உணவக உரிமையாளரின்...

சாலையை கடக்க சிறுமிக்கு உதவிய வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

கோவை சிங்காநல்லூரில் பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞர் யோகேஷ், சாலையை கடக்க சிறுமிக்கு உதவுவதை தவறாகப் புரிந்து கொண்டு குழந்தையை கடத்துவதாக கருதிய அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து விசாரித்து போலீசார் விடுவித்த நிலையில், மறுநாள் அதேபகுதியில்...

இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பலில் தீ விபத்து.!

இங்கிலாந்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பலில், தீ பற்றியதில் வானுயரும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. சொகுசு கப்பலில் எட்டாயிரம் லிட்டர் டீசல் இருந்ததே தீ விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்து உள்ளனர். கட்டுக்கடங்காத அளவில்...

உக்ரைனில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.!

உக்ரைனில் சோலார் மின்உற்பத்தி ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் 3 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகளின் மும்முனை தாக்குதலில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் சின்னா...

ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் ராணுவத்தின் ரகசிய ட்ரோன்.!

ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் ராணுவத்தின் ரகசிய ட்ரோன் தளத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. ஷாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் தாக்குதல், உளவு, உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நூறு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளுடன் அணிவகுத்து நிற்கின்றன. ஏமன் ஹவுதி கிளர்ச்சிக்...

இலங்கைக்கு ரஷ்யா அனுப்பிய கச்சா எண்ணெய்யால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறையும் என தகவல்

இலங்கைக்கு ரஷ்யா அனுப்பிய 90 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கிடைத்திருப்பதால் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா அனுப்பிய சரக்குகளை எடுக்க செலுத்த வேண்டிய பணம் இல்லாமல் ஒருமாதம் இந்த டெலிவரிக்காக காத்திருந்தது. இப்போது இந்த சரக்கை...

அயர்லாந்து நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிப்பு.!

அயர்லாந்து நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட இந்த நோய், உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு...

கிறிஸ்தவ ஆலயத்தில் கூட்ட நெரிசல் ; குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு நகரமான போர்ட் ஹார்கோர்ட்டில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவாலயத்தில் உணவு பெற வந்த...

பெர்முடா முக்கோணம் சுற்றுலா செல்வோருக்காக விளம்பரம்.. முழுப் பணத்தைத் திருப்பித் தருவதாக ஏஜன்சி உறுதி.!

பெர்முடா முக்கோணப் பகுதிக்கு சொகுசுக் கப்பலில் சுற்றுலா அழைத்துச் செல்லும் டிராவல் ஏஜன்சி ஒன்று கப்பல் மாயமாக மறைந்துவிட்டால் முழுப்பணத்தையும் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளது. வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள வரையறுக்கப்பட்டப் பகுதியான பெர்முடா முக்கோணத்தில் நிறைய விமானங்களும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில்...

பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். பெர்னாம்பகோ மாகணத்தில் கடந்த இரு நாட்களில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. பேரிடரில் சிக்கி 35 பேர்...