​​
Polimer News
Polimer News Tamil.

கோவை இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஆனந்த் மகிந்திரா... அன்னையர் தினத்தன்று பரிசு

கோவை வடிவேலம்பாளையத்தில் குறைந்த விலையில் இட்லி விற்றுத் தொண்டாற்றி வரும் மூதாட்டி கமலாத்தாளுக்காக வீடு கட்டிய மகிந்திரா நிறுவனம் அதை அன்னையர் நாளான இன்று பரிசளித்துள்ளது. முப்பதாண்டுகளுக்கு மேல் இட்லி விற்றுவரும் கமலாத்தாள் பாட்டி பற்றி அறிந்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா மூன்றரை...

சென்னையில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.!

சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். கோவிந்தசாமி நகரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 29ம் தேதி முதல்  300க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணிகள் துவங்கியதற்கு...

கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால், வாராந்திர சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க...

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட உள்ளது - அமைச்சர் கே.என்.நேரு

கோயம்புத்தூர் மக்களுக்குத் தங்குதடையின்றி சிறுவாணி குடிநீர் கிடைப்பது தொடர்பாக கேரள முதலமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு பதில் கிடைக்காததால், அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி பணிகளை அமைச்சர்கள் கே என் நேரு மற்றும்...

52 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய "கமி ரீட்டா ஷெர்பா" : 26 முறை ஏறி உலக சாதனை

52 வயதான கமி ரீட்டா ஷெர்பா  26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். மலையேற்றத்திற்கு பெயர் பெற்ற ஷெர்பா இனத்தை சேர்ந்தவரான கமி ரீட்டா, 10 மலையேற்ற வீரர்களை வழி நடத்தியவாறே 29,031 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தின்...

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா பகுதிகள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி...

ஜம்மு காஷ்மீரில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள் இருவரை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்ட ராணுவத்தினர்.!

ஜம்மு காஷ்மீரில் ஆற்றுவெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள் இருவரை ராணுவத்தினர் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். கிஸ்துவார் மாவட்டத்தில் சிந்து ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான சீனாப் ஆற்றின் வெள்ளத்தில் இளைஞர் இருவர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த ராணுவத்தினர் ஆற்றின் இருகரைக்கும் கயிற்றைக் கட்டி...

கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து : பதைபதைக்கும் காட்சிகள்..!

கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற பைக் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சங்கேஸ்வரம் பெல்காம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற போது...

பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..!

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு விதித்த தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஆதீனகர்த்தர்கள், பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதீனகர்த்தர்கள், பட்டின...

"குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவோருக்கு 15 நாட்கள் காலக்கெடு" - மேயர் பிரியா

சென்னையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் வழங்குவோருக்கு முதலில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 15 நாட்கள் காலக்கெடு வழங்கப்படும் எனவும் அதன் பிறகே அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கே.கே நகரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி...