​​
Polimer News
Polimer News Tamil.

காணிக்கை பணத்தை பூமியில் மரமாக நடுங்கள்... இயற்கையே இறைவன்..! என்ன ஒரு அறிவார்ந்த உபதேசம்..!

கோவை மாவட்டத்தில் மலைகளை கடந்து வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க சென்ற பக்தர் ஒருவர் அங்கிருந்த அடியாருக்கு காணிக்கையாக பணத்தை கொடுக்க, பணத்தை வாங்க மறுத்த அவர், மரம் நடுங்கள் என்று தெரிவித்த அறிவுரை பக்தர்களை நெகிழ வைத்துள்ளது. பணம் தேடி அலையும் உலகில்...

ஆசிய கோப்பை ஹாக்கியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு!

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மே மாதம் 23 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கத்தை வென்றதுடன், அடுத்த...

கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்மாற்றில் தலைக்குப்புற சொருகிய பைக்.. சிறு காயங்களுடன் உயிர்த் தப்பிய இளைஞர்..!

கேரளாவின் வெள்ளியாங்குழி பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றியில் இருசக்கர வாகனம் ஒன்று தலைக்குப்புற சொருகி இருந்ததை கண்டு பொதுமக்கள் குழப்பமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்ததில் இளைஞர் ஒருவர், அதிவேகமாக பைக்கில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து...

முகக்கவசம் கட்டாயமில்லை.. அபராதம் விதிக்கப்படாது - அமைச்சர் ராஜேஷ் தோபே

மகாராஷ்டிரத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என மாநில நலவாழ்வுத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் முகக்கவசம் அணியச் சொன்னது வேண்டுகோள் தான் என்றும், கட்டாயம் இல்லை என்பதால் அபராதம் விதிக்கப்படாது...

பாடகர் சித்து மூசேவாலாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா..!

பஞ்சாபில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலாவின் பெற்றோரைச் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். காவல்துறைப் பாதுகாப்புத் திரும்பப் பெறப்பட்டதும், அதை வெளிப்படையாக அறிவித்ததும் சித்து மூசேவாலா கொலைக்குக் காரணம் எனப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மூசேவாலாவின் பெற்றோர்...

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 7,...

கொழும்பு டு மாஸ்கோ புறப்பட இருந்த விமானம் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தம்.. இறக்கி விடப்பட்ட பயணிகள்.. காரணம் என்ன.?

கொழும்பில் இருந்து மாஸ்கோவுக்குப் புறப்பட இருந்த ஏரோபுளோட் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் அதிலிருந்த பயணியர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். ரஷ்யாவின் ஏரோபுளோட் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்குப் பெற்று விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கொழும்புக்கு வந்த ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் மீண்டும்...

சென்னை விமானநிலையத்தில் ரூ.4.21 கோடி மதிப்பிலான 60 தங்க கட்டிகள் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில், 4 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான, சுமார் 9 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை பகுதியிலிருந்து 60 தங்கக்கட்டிகளும், விமானநிலையத்தின் வருகைப்பகுதியில் உள்ள கழிவறையிலிருந்து பேஸ்ட்...

என் இடத்துல எப்படி புதைப்பது.. அடக்கம் செய்த அண்ணனின் உடலை 18 நாட்களுக்கு பின் தோண்டி எடுத்த தம்பி!

கன்னியாகுமரி மாவட்டத்தில், தனக்கு சொந்தமான இடத்தில் புதைக்கப்பட்ட இறந்த அண்ணனின் உடலை 18 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைத்தது தொடர்பாக தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஜெஸ்டஸ், கடந்த மாதம் 16ஆம் தேதி...

போட்டோவுக்கு போஸ் கொடுக்காததால் இப்படியா செய்வது.. நடிகர் பாலகிருஷ்ணா செயலுக்கு ரசிகர்கள் திட்டி விமர்சனம்..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்.டி ராமாராவின் மகனும், அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரது படங்களில் ரயில் முன் பாய்ந்து தாண்டி செல்வது, துப்பாக்கி குண்டுகளை கடித்து துப்புவது போன்ற ஏராளமான காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் பாலகிருஷ்ணா நடித்த அகண்டா...