​​
Polimer News
Polimer News Tamil.

வடமேற்கு, மத்திய இந்தியப் பகுதிகளில் அடுத்த 3 நாளுக்கு அனல்காற்று வீசும் - வானிலை ஆய்வுத்துறை தகவல்!

நாட்டின் வடமேற்குப் பகுதியிலும் நடுப்பகுதியிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, டெல்லி, உட்புற ஒடிசா, சத்தீஸ்கர், தெற்கு உத்தரப் பிரதேசம், வடக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த...

எத்தனால், மெத்தனால் ஆகியவையே வருங்கால எரிபொருட்களாக இருக்கும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

எத்தனால், மெத்தனால் போன்றவையே எதிர்கால எரிபொருட்களாக இருக்குமென என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் மின்சார டிராக்டர், லாரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிசக்தி மற்றும் ஆற்றல் துறையின்...

நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பெண்கள் கைவரிசை... 3 சவரன் செயின் திருட்டு!

சேலம் மாவட்டத்தில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 3 பெண்கள் தங்க செயினை ஆடைக்குள் மறைத்து திருடிச் சென்றனர். வாழப்பாடி அருகே உள்ள சசி ஜுவல்லரி நகைக்கடைக்கு முக கவசம் அணிந்தபடி வந்த 3 பெண்களில் ஒருவர் மோதிரம் வாங்க வந்த...

ஸ்விக்கி நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

கோவையில் ஸ்விக்கி நிறுவன ஊழியரை போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியோ காட்சி வெளியான நிலையில், அந்த காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. நீலாம்பூரை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரியான மோகன சுந்தரம் என்பவர் ஸ்விக்கியில் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர்...

ரசாயன தொழிற்சாலை பாய்லரில் வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு.. 15 பேர் படுகாயம்.!

உத்தரபிரதேசம் மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள ஹாபூர் ஐ.ஜி பிரவீன்...

பிரபல சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் பிரபல சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான சுமார் 14.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதால் சுமார் 25 ஆண்டுகளாக அங்கிருந்த முருகன் கோவிலில் கிராம மக்கள் வழிபட முடியாத...

ரூ.5 லட்சம் பணம் கையாடல் செய்ததாக மிரட்டல்.. ஹோட்டல் ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை..!

சேலத்தில் ஹோட்டல் ஊழியர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதூர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில்...

முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் சொத்துமதிப்பு 25% வளர்ச்சி.!

முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 25 விழுக்காடு வளர்ச்சியடைந்து 2498 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. 2021 - 2022 நிதியாண்டில் 46 கோடியே 29 இலட்ச ரூபாய் நிகர இலாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 45...

செருப்பால் சிக்கிய கொள்ளையர்கள்.. தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது.. 32 சவரன் நகை பறிமுதல்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை அவர்கள் அணிந்த செருப்பை அடையாளமாக வைத்து போலீசார் கைது செய்தனர். சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டுகள் அரங்கேறி வருவதாக வந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி...

62 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் பெற்ற அதானி நிறுவனம்.!

மத்திய அரசின் மின்னுற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் 62 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு ஆறாயிரத்து 585 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு டெண்டர்களை அதானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அண்மையில் வழங்கப்பட்ட இந்த டெண்டர்களை எடுக்கச் சென்னையைச் சேர்ந்த...