​​
Polimer News
Polimer News Tamil.

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் 76-வது பிறந்த தினம்.. நினைவிடத்தில் மனைவி, மகன் அஞ்சலி..!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மனைவி சாவித்ரி, மகன் சரண் ஆகியோர் நினைவஞ்சலி செலுத்தினர். அப்போது 6 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள எஸ்பிபியின் உருவப்படத்தை...

இங்கிலாந்து ராணி அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள தீவுக்கு பெயர் மாற்றம்!

இங்கிலாந்து ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த தருணம் பொக்கிஷம்...

இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதித்த தந்தை.. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்..!

சேலம் ஓமலூர் அருகே, சிறுவனை இருசக்கர வாகனம் இயக்க அனுமதித்த தந்தை மீது, 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் இருசக்கர வாகனத்தை இயக்கிய வீடியோ தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியான நிலையில், தீவட்டிபட்டி கிராம நிர்வாக...

ஒற்றைக் காலால் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்பதாகப் பிரேம் பண்டாரி அறிவிப்பு.!

ஜம்மு காஷ்மீரில் ஒற்றைக் காலால் துள்ளித் துள்ளிப் பள்ளிக்குச் சென்றுவரும் சிறுவனுக்கு இலவசமாகச் செயற்கைக் கால் பொருத்தும் செலவை ஏற்றுக்கொள்வதாக ஜெய்ப்பூர் பூட் தொண்டு நிறுவனத் தலைவர் பிரேம் பண்டாரி அறிவித்துள்ளார். ஹண்டுவாராவைச் சேர்ந்த சிறுவன் பர்வைஸ், வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர்...

மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்பட்டதால் அவசர சிகிச்சைப்பிரிவில் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்..!

பீகார் மாநிலம் சசராம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மொபைல் போன் வெளிச்சத்தில் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கும் மருத்துவர் பிரிஜேஷ் குமார், நாள்தோறும் இதுபோன்ற சூழ்நிலைகளை சந்திப்பதாக...

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த பயணிகள்.!

அமெரிக்காவில் பொழுதுபோக்கு பூங்காவில், எந்திரக்கோளாறு காரணமாக ராட்டினத்தில் பயணம் செய்த  பயணிகள் அந்தரத்தில் தவித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பென்சில்வேனியா மாகணத்தில் உள்ள கென்னிவுட் பொழுதுபோக்கு பூங்காவில், ஏரோ 360 என்ற வகை ராட்டினத்தில் பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகள், எந்திரக்கோளாறு...

வெள்ளி மாலையில் இரு பிரிவினரிடையே கல்வீசித் தாக்குதல்.. வன்முறை தொடர்பாக 36 பேர் கைது..!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 36 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கான்பூரில் வெள்ளி மாலையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையினர் 13 பேரும், இரு பிரிவுகளையும் சார்ந்த 30 பேரும்...

உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த 8 பேர், நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன் அவர்கள் பதவி ஏற்பு உறுதி மொழி ஏற்றனர். 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக...

கர்நாடகாவில் ஹெலிகாப்டரில் இலசவமாக சுற்றிப்பார்த்த விவசாயிகள்.!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹெலி டூரிசம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணம் செய்தனர். ஒசதுர்காவில் நேற்றும் இன்றும் சுமார் 200 பேர் அப்பகுதியை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்தனர். அதேபோல் வாணி...

லாரியில் கொண்டுசெல்லப்பட்ட ராட்சத தூண்கள் கட்டப்பட்டிருந்த சங்கிலி அவிழ்ந்து விழுந்து பெரும் விபத்து.!

திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்காக லாரியில் கொண்டுசெல்லப்பட்ட ராட்சத தூண்கள் திடீரென சாலையில் சரிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைமை அரசு மருத்துவமனை அருகே சென்ற போது லாரியில் கட்டப்பட்டிருந்த இரும்புச்சங்கிலி அறுந்ததில் தூண்கள் சாலையில் சரிந்தன. அந்த சமயத்தில் லாரியின்...