​​
Polimer News
Polimer News Tamil.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு.!

ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தமது அமைச்சரவையை இன்று மாற்றியமைக்கிறார். இதற்காக அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். ஒடிசாவில், வரும் 2024 ஆம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை...

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோயில்களின் சிலைகள் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஒப்படைப்பு.!

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோயில்களின் 10 ஐம்பொன் சிலைகள், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்காக சிலைகள் அனைத்தும் நேற்றிரவு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு காவல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. புன்னைநல்லூர் கைலாசநாதர்...

பெண் குழந்தை பெற்றது ஏன்? பெண்ணை வீதியில் இழுத்து போட்டு தாக்கிய கொடுமை..!

தொடர்ச்சியாக 2 பெண் குழந்தைகளை பெற்ற பெண்ணை, ஆண் குழந்தை பெற்றுதராதது ஏன்? எனக்கேட்டு அவரது மாமியார் வீதியில் இழுத்துபோட்டு அடித்து உதைத்த  கொடுமை எதிர் வீட்டுக்காரர் எடுத்த வீடியோ மூலம் அம்பலமாகி உள்ளது. இவர்கள் எல்லாம் இன்னுமா திருந்தல என்று கேள்வி...

போர்டு தொழிற்சாலையில் செட்டில்மெண்ட் பணத்தை உயர்த்தி தரக்கோரி ஊழியர்கள் 6வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்.!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போர்டு தொழிற்சாலையில் செட்டில்மெண்ட் பணத்தை உயர்த்தி தரக்கோரி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் 6வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிறுவனத்தின் கார்களின் விற்பனை இந்தியாவில் குறைய தொடங்கியதை அடுத்து கார் உற்பத்தி வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்பட உள்ளது....

ஊமைப்படமாக ஓடிய விக்ரம்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்.. டிக்கெட் பணம் ரிட்டர்ன்.!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள லெட்சுமி திரையரங்கிலும் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. சனிக்கிழமை காலை 11மணி காட்சி ஓடிக்கொண்டு இருக்கும்...

இந்தியாவின் 56000 டன் கோதுமை ஏற்றுமதியை நிராகரித்த துருக்கி.!

இந்தியாவின் 56 ஆயிரம் டன் கோதுமையை கொண்டு செல்ல துருக்கி மறுத்துவிட்டது ஏன் என்று விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 56 ஆயிரம் டன் கோதுமையை ஏற்காமல் துருக்கி அரசு திருப்பி...

11 அடுக்கு, 794 அறைகள்.. அசர வைக்கும் சொகுசு கப்பல் சுற்றுலா..!

தமிழகத்தில் முதன் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கார்டிலியா சொகுசுக் கப்பலின் சிறப்பம்சங்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை...

உயிரிழந்த ராணுவ வீரரின் பிறந்தநாளையொட்டி இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தியை அர்ப்பணித்த குடும்பத்தினர்.!

மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தார் 20 கிராமத்தினர் பயனுறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தியை அர்ப்பணித்தனர். சின்ன உலகாணி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இந்திய ராணுவ வீரராக...

கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டும் பணி செய்து வந்த நபர் சடலமாக மீட்பு..!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி செய்து வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதனூர் குமாரமங்கலம் இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்திற்கான கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த...

வீடு கட்டும் பணியின் போது பழைய சுவர் இடிந்து விபத்து.. 3 தொழிலாளர்கள் படுகாயம்.!

தூத்துக்குடியில் வீடு கட்டும் பணியின் போது அருகில் இருந்த பழைய சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். டி.ஆர்.நாயுடு தெருவில் பாலு என்பவரின் புதிய வீடு கட்டும் பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கிடையில்...