​​
Polimer News
Polimer News Tamil.

பனிபடர்ந்த மலைப்பகுதியில் ஒரே நேரத்தில் புழுதி பறக்க ஓடிய நூற்றுகணக்கான குதிரைகள்

சீனாவின் பனிபடர்ந்த மலைப்பகுதியில் ஒரே நேரத்தில், நூற்றுக்கணக்கான குதிரைகள் ஓடியது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள, யிலி குதிரை வளர்ப்பு தளத்தின் ஒரு சுற்றுலா திட்டம் இதுவாகும். ஆரம்ப கட்டத்தில் குதிரைகளுக்கு பயிற்சி அளிக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை,...

தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் செம்மஞ்சேரியில் 4 செ.மீட்டரும், கொளப்பாக்கத்தில் 3...

உயிரியல் பூங்காவில் ஆமையை விருந்தாக்க முயன்ற சிறுத்தை

ஆமையை வேட்டையாட நினைத்து அது முடியாமல் ஏமாற்றமடைந்து நிராசையுடன் செல்லும் சிறுத்தையின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. பிரேசிலின் பான்டனடால் மாட்டோகுரோசென்ஸ் தேசிய உயிரியல் பூங்காவில் (Pantanal Matogrossense National Park) பசியால் அலைந்த இந்த சிறுத்தை அங்குள்ள தண்ணீர் குட்டைக் கரையில்...

பறவைகள் திருவிழா மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

நெல்லையில் 3 நாட்கள் பறவைகள் திருவிழாவும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. தாமிரபரணி பாசனக் குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்த பறவைகளை இனம், ரகம் வாரியாக பிரித்து கணக்கெடுக்கின்றனர். நாமக்கோழி, மூக்கன் தாரா, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, ஜம்பு நாரை, கூழைக்கடா, பவளக்கால் உள்ளான்...

காவலன் செயலியை ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்

ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள், பாதுகாப்பிற்கு காவலன் செயலியை பயன்படுத்தும்படி தமிழக இருப்புப்பாதை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இருப்புப்பாதை காவல்துறை ஆற்றிய சேவைகளை விளக்கி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உதவி மைய எண் 1512 மற்றும் தொலைதொடர்பு எண் 9962500500 ஆகியவை...

வீட்டருகே நிறுத்தியிருந்த ஆடி கார் சேதம் - நடிகை ஸ்ரீரெட்டி புகார்

வீட்டருகே நிறுத்தியிருந்த தனது ஆடி காரை சேதப்படுத்திவிட்டதாக, தொலைக்காட்சி சீரியல் புரடக்சன் மேனேஜராக உள்ள ஒருவர் மீது நடிகை ஸ்ரீரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் தான் தங்கியுள்ள வாடகை வீட்டருகே சீரியல், வெப்சீரிஸ் தொடர்பான படப்பிடிப்புகள்...

ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரின் டிக்டாக் வீடியோ - வைரல்

ஆந்திர மாநில பெண் துணை முதலமைச்சரான புஷ்பா ஸ்ரீவாணி, அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை புகழும்படியாக வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றபோது, அவரை புகழும்படியாக “ ராயலசீமா...

திருப்பதியில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில், மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். சர்வ...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் - இஸ்ரோ தலைவர் சிவன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மொத்தம் 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திராயன்-3...

மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை விற்க அனுமதி..

லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை, அவருக்கு கடன் வழங்கிய வங்கிகள் விற்று பணம் திரட்டிக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்து...