​​
Polimer News
Polimer News Tamil.

பாக்தாத் தூதரக தாக்குதல்-ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படையான கத்தேப் ஹிஸ்புல்லாவின் 25 பேரை அமெரிக்க விமானப்படை குண்டு வீசி கொன்றதற்கு...

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றார்

இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிபின் ராவத் இன்று காலை சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.  தொடர்ந்து...

உலகிலேயே புத்தாண்டு தினத்தில் இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறந்துள்ளது - UNICEF

புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, நேற்று நள்ளிரவு முதல், ஜனவரி 1ஆம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில், உலகம் முழுவதும்  சுமார் 3 லட்சத்து...

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை

புதுச்சேரியில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை...

முதலமைச்சருக்கு, துணை முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து...

மானியம் இல்லா சமையல் சிலிண்டர் விலை உயர்கிறது

புத்தாண்டு தினத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14புள்ளி 2 கிலோ எடை உள்ள சிலிண்டரின் விலை 19 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அதன் விலை 734 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று ஜெட்...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடக்கம்

புத்தாண்டு நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் காலையில் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 189.78 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 443ஆக அதிகரித்தது. இதேபோல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 53 புள்ளிகள் உயர்ந்து, 12...

குடும்பத்துடனும் நண்பர்களுடனும் புத்தாண்டை வரவேற்ற சுற்றுலாப் பயணிகள்

உதகையில் குவிந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள், குடும்பத்துடனும் நண்பர்களுடனும் இணைந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.  புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும் விடுமுறையை கழிப்பதற்காகவும் குவிந்த சுற்றுலாப்பயணிகளால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்கள் நிரம்பி வழிந்தன. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை...

புதிய ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புதுப்பொழிவுடன் பிறந்துள்ள புதிய ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நேற்றிரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களைக் கட்டிய நிலையில் கடற்கரை, சுற்றுலா படகு தளங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலை மோதியது. அதே போல்...

பாக். தீவிரவாதிகளின் ஊடுருவல் திட்டம் முறியடிப்பு.. இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்..!

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைந்தனர். ரஜோரி (Rajouri) மாவட்டம், நவ்ஷரா (Nowshera) பிரிவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து...