​​
Polimer News
Polimer News Tamil.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் பெண்கள் போட சென்றால் குடும்பம் அலங்கோலமாக மாறிவிடும்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெண்கள் கோலம் போட சென்றால் குடும்பம் அலங்கோலமாக மாறிவிடும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுபான்மையினரை தூண்டிவிட்டு...

இலவச வேட்டி சேலை முறைகேடு வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவு

இலவச வேட்டி - சேலை திட்டத்தில் 21 கோடியே 31 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைத்தறித் துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய...

வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு - போலீசார் தடியடி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குப்பெட்டி அறை தாமதமாக திறக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில்...

போலி செய்திகளை தடுக்க இன்ஸ்டாகிராம் நடவடிக்கை

போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் முயற்சிகளை இன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடங்கியுள்ளது. போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்ஸ்டாகிராம் போலி...

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம் - பி.வி.சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சம் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி அளித்த அவர், எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றார். சில போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், மனம் தளரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்....

குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க ஊர்திக்கு அனுமதி இல்லை - மத்திய அரசு

டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அணி வகுப்பில் பங்கேற்க மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு...

மத்திய அரசின் காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள்

மத்திய அரசின் புத்தாண்டு காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ காலண்டரை வெளியிடுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், மக்களை ஊக்கப்படுத்தும் வாசகங்களும் அதில்...

ஆஸ்திரேலியாவில் தொடர்கிறது காட்டுத் தீ

காட்டுத் தீயின் வீரியத்தால் ஆஸ்திரேலியாவின் தலைநகரே திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. அந்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் கான்பெராவை சுற்றிலும் உள்ள காடுகளில் தீ பரவி உள்ளதால், நகரெங்கும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. தபால்...

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம்

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 62 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 21 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் வடிந்த நிலையில், வீடுகளுக்கு திரும்பி உள்ள...

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பிரச்சாரம் - பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதவான பிரச்சாரத்திற்கு மாநில வாரியான பொறுப்பாளர்களை பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள, வரும் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாடு தழுவிய...