​​
Polimer News
Polimer News Tamil.

டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஏராளமானோர் வாகனங்களில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தியா கேட், கன்னாட் சர்க்கிள் பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் மாலையில் திரண்டனர். ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேர் வந்ததால்,  இந்தியா கேட்டை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து...

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறிய 700 பேர் மீது வழக்கு பதிவு

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,சென்னையில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டதால் குற்றங்கள் குறைந்துள்ளது என்றார். இதுகுறித்த புள்ளி...

2020-ம் ஆண்டின் முதல் நாளில் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம்

புத்தாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 52 புள்ளிகள் உயர்ந்து, 41 ஆயிரத்து 306 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14 புள்ளிகள் உயர்ந்து, 12 ஆயிரத்து...

நெட் தேர்வில் உதவி பேராசிரியர் பணிக்கு 60,147 பேர் தேர்ச்சி

நெட் தேர்வில் 60 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ நடத்தி வந்த இந்த தேர்வை கடந்த ஆண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.  நடப்பாண்டிற்கான நெட் தேர்வு கடந்த டிசம்பர் மாதம்...

நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பா.ஜ.க,வினர் போராட்டம்

பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நெல்லை கண்ணன் பேசியதாக கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய பா.ஜ.க.நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே பொன்.ராதாகிருஷ்ணன், எச்...

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அண்ணா பல்கலை. அறிவிப்பாணைக்கு தடை

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே, 518 தற்காலிக ஆசிரியர்கள் உள்ள நிலையில் மீண்டும் தற்காலிக...

ரூ. 15,000 கோடி கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேசை வாங்க இந்துஜா குழுமம் ஆர்வம்.!

முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இந்துஜா குழுமம் வாங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஜெட் ஏர்வேஸ் சுமார் 8,230 கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது. இதர நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுமார்...

இந்தியா-சீனா உறவு புதிய உயரத்தை எட்டும் - இந்தியாவுக்கான சீன தூதர் தகவல்

நடப்பு ஆண்டில் இந்தியா- சீனா இடையேயான உறவு புதிய உயரத்தை எட்டும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், இந்தியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் நடந்த இந்தியா -...

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்

செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, நடப்பு ஆண்டில் புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா....

சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில்...