​​
Polimer News
Polimer News Tamil.

2019 ல் இருசக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சி

கார் விற்பனையில் ஏற்பட்ட சரிவைப் போலவே, கடந்த ஆண்டு இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையும் வீழ்ச்சி அடைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் தங்களது உள்நாட்டு விற்பனை பலமடங்கு குறைந்து விட்டது என முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களான...

கருணாநிதியை விட சிறப்பாக ஸ்டாலின் கட்சி நடத்துகிறார் - T.R.பாலு

கருணாநிதியை விட பத்து மடங்கு சிறப்பாக ஸ்டாலின் கட்சி நடத்துவதாக தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் தாமதம் செய்யப்படுவதாக, மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்  அவர்...

குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பு ஊர்திகள்: மேற்குவங்கம், கேரளா, மகாராஷ்டிரா சேர்க்கப்படாததால் சர்ச்சை

டெல்லி குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்திகளுக்கான பட்டியலில் மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிராவை மத்திய அரசு சேர்க்காததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டங்களில்,  மத்திய அமைச்சகங்கள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பது...

ஈரானின் முக்கிய தளபதியை கொன்றது அமெரிக்கா

ஈரான் படையின் முக்கிய தளபதியை அமெரிக்கா குண்டு வீசி  கொன்றது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் அதன் தூதரகத்திற்கு எதிரான தாக்குதல்களில் ஈரான் ஆதரவு குவட்ஸ் படை மற்றும் ஹிஸ்புல்லா புரட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த 25 பேரை அமெரிக்கா குண்டூ வீசி...

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தவர் 1000 பேர் கைது - வங்கதேச அரசு

இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த தமது குடிமக்கள் 1000 பேரை கடந்த ஆண்டு கைது செய்துள்ளதாக வங்க தேச அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் ஷபீனுல் இஸ்லாம் டாக்காவில் தெரிவித்தார்....

டெல்லியில் நீடிக்கும் கடும் குளிர்: வீடு இல்லாதவர்கள் காப்பகங்களில் தங்கவைப்பு

டெல்லியில் நிலவும் கடும் குளிரில் உறைவிடம் இல்லாமல் தவித்த வெளிமாநிலத்தவர்கள் அரசு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர். டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று காலை சஃப்தர்ஜங்க் பகுதியில் 5.8 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குளிர் பதிவானது. அது...

தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்துள்ளது.  சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று சவரன் 29 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 456 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 30 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு...

போண்டா சாப்பிட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

போண்டா  தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சூளைமேடு காமராஜ் நகர் 3வது தெருவை சேர்ந்த கங்காதரனின் மனைவி பத்மாவதி நேற்று தனது தாயுடன் வெளியே சென்று ஐந்து போண்டாக்களை வாங்கி...

ஒன்றிய கவுன்சில் தேர்தல் முடிவுகள் - திமுக கூட்டணி வெற்றி

ஒன்றிய கவுன்சில் தேர்தல் முடிவுகள்  கோவை மாவட்டத்தில் அதிமுக - 84, தேமுதிக - 3, பாஜக - 4 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி கோவை மாவட்டத்தில் திமுக - 51, காங்கிரஸ் - 4, மதிமுக - 1, சுயேச்சை -...

திமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள்..!

திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது - மு.க.ஸ்டாலின்   தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை   தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி திமுக கூட்டணி வெற்றி - ஸ்டாலின்  14 மாவட்டங்களில்...