​​
Polimer News
Polimer News Tamil.

ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்கும் திட்டத்துக்கு டி. ராஜேந்தர் வரவேற்பு

ஆன்லைன் மூலம் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் தமிழக அரசின் திட்டத்துக்கு நடிகர் டி. ராஜேந்தர் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், திரைப்படத்துறை அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும்,விரைவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து  திரைப்படத்திற்கு விதிக்கப்படும்...

தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி

தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தீர்மானம்...

ஒரே பதவிக்கு இருவர் வெற்றிப்பெற்றதாக அடுத்தடுத்து அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இருவர் வெற்றிப்பெற்றதாக அதிகாரிகள் அடுத்தடுத்து சான்றிதழ் அளித்ததால் குழப்பம் ஏற்பட்டது. சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேவி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்...

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி, இளைய விஞ்ஞானிகளின் கையில் இருப்பதாக, பிரதமர் மோடி கூறி இருக்கிறார். இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சி, புதிய பாதையில் பயணிக்க,  நவீன தொழில்நுட்பங்கள் தேவைப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 107 ஆவது இந்திய அறிவியல் மாநாடு நடக்கிறது....

பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த ராணுவம் தயார்: நரவானே

அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்தத் தயார் என்று புதிய தலைமை தளபதி எம்.எம்.  நரவானே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருப்பதையும், ஊடுருவல் நடக்காமல் இருப்பதையும் ராணுவம் உறுதி செய்து...

பள்ளி நண்பர்களோடு பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டில் தாம் படித்த பள்ளிக்குச் சென்று நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அங்குள்ள எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் 1970ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு...

இந்திய பயணத்தை ரத்து செய்த ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலிய புதர்த் தீ எதிரொலியாக தமது இந்தியப் பயணத்தை ரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார்.  ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் புதர்த் தீ பற்றியெரிந்து வரும் சூழலில் ஸ்காட் மாரிசன் நாட்டை விட்டுச் செல்வது பொருத்தமானதாக இருக்குமா...

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் அதை ஓட்டிய கர்நாடகா பகுதியில் நிலவும்...

பாகிஸ்தான் வான்பரப்பை தவிர்க்கும்படி அமெரிக்க விமானங்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

பாகிஸ்தான்  வான்பரப்பில் பறப்பதை தவிர்க்கும்படி அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  அமெரிக்க வர்த்தக மற்றும் போக்குவரத்து விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்கும்போது, அவற்றின் மீது...

ம.பி.யில் அரசு மருத்துவர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய பிரதேச அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.    மேலும் 2,300 மருத்துவப் பேராசிரியரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி...