​​
Polimer News
Polimer News Tamil.

புத்தாண்டில் குழந்தை பிறப்பு: இந்தியா முதலிடம்

புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனிசெப் நிறுவனம் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில்தான் குழந்தைகள் பிறப்பு அதிகம் என்று கூறியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், பசிபிக் பெருங்கடலில் இருக்கும்...

தன்னைச் சீண்டிய இளைஞனை ஓட ஓட விரட்டிய காட்டு யானை

ஒடிசாவில் தன்னைச் சீண்டிய இளைஞனை காட்டு யானை ஒன்று விரட்டி விரட்டி ஓடவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. மயூர்பஞ்ச் என்ற இடத்தில் விளைநிலத்தில் புகுந்த ஆண்டு காட்டு யானையை அங்கிருந்த கிராமத்தினர் விரட்டினர். கிராம மக்களின் சப்தத்தினால் மிரண்ட யானை அங்கிருந்து மெதுவாகச்...

நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தள்ள நேற்று ஜேசிபி இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் முற்றுகையிட்டனர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தைவை கைது செய்ய குஜராத் போலீசார்...

சிறைச்சாலையில் கால்பந்து விளையாட்டில் கைதிகளிடையே மோதல்

மெக்ஸிகோவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 16 கைதிகள் உயிரிழந்தனர். ஸகாடகாஸ் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே கால்பந்து விளையாடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கைதிகள் குழுவாக இணைந்து கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்...

சுறா மீனைக் கட்டிப்பிடித்தபடி நடனம் ஆடிய நீச்சல் வீரர்

ரஷ்யாவில் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது நீச்சல் வீரர் ஒருவர் சுறா மீனைக் கட்டிப்பிடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நெப்டியூன் வணிக வளாகத்தில் பிரமாண்டமான மீன் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை...

குரு கோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

சீக்கிய மதத்தை உருவாக்கி வளர்த்த பத்து குருக்களில் பத்தாவது குருவான போர்வீரர் குருகோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  சீக்கியர்கள் இதற்காக நேற்று பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினர். அமிர்தசரஸ் நகரின் புனிதத் தலமான பொற்கோவில் குருதுவாராவில் இருந்து...

குஜராத் உயிரியல் பூங்காவில் வாட்டும் குளிரிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற புதிய யுக்தி

குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளைக் காக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தலைநகர் அகமதாபாத்தில் கன்காரியா விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. தற்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் விலங்குகளும் ஏனைய உயிரினங்களும் வாடின. இதையடுத்து குளிரில் இருந்து விலங்குகளைக் காப்பாற்றும்...

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான், பாகிஸ்தானில் இன்று, சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இருநாட்டு நல்லுறவை மேம்படுத்த இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. இப்பயணத்தின் போது சேக் முகமது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்...

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 4 ஆயிரம் வீரர்களை ஈராக்கில் களமிறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது....

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போப்பின் கையைப் பிடித்து இழுத்த பெண்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்ணின் கையை தட்டி விட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். வாடிகன் நகரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது போப் மக்களை நேரடியாகச் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது பெண் ஒருவர் ஆர்வமிகுதியால் போப்பின் கையைப் பிடித்து...