​​
Polimer News
Polimer News Tamil.

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம்

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 62 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 21 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் வடிந்த நிலையில், வீடுகளுக்கு திரும்பி உள்ள...

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பிரச்சாரம் - பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதவான பிரச்சாரத்திற்கு மாநில வாரியான பொறுப்பாளர்களை பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள, வரும் 5 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாடு தழுவிய...

காங்கிரஸுக்கு சிவசேனா கண்டனம்

அமைச்சர் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வன்முறையில் ஈடுபடுவதாக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்தில் மூன்று கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால்...

தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் வாழ்த்து

மத்திய அரசின் சிறந்த நிர்வாகத்திற்கான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றதற்கு அனைத்து துறை முதன்மை செயலாளர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிறந்த நிர்வாகத்திற்கான மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில், சட்டம் ஒழுங்கு, மக்களின்...

தேர்தல் ஆணையரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார்

முதலமைச்சருக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையர் செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரிடம் முறையிட செல்வதற்கு முன்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின்...

கேரள சட்டப்பேரவைத் தீர்மானம் சட்ட விரோதமானது - கேரள ஆளுநர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சட்ட ரீதியாகவும், அரசியலமைப்பின்படியும் செல்லாது என்று மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் கூறி இருக்கிறார். குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் அதிகாரப்பட்டியலில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், எனவே மாநில அரசின்...

தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல ஊர்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 8 செ.மீட்டரும், கேளம்பாக்கத்தில் 7 செ.மீட்டரும், சோழவரத்தில்...

LIVE UPDATES: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நிலவரம்..!

வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் 02-01-2020 || 06.00pm வாக்கு எண்ணிக்கை சுவராஸ்யம் 73 வயது மூதாட்டி தங்கவேலு வெற்றி  மதுரை-அரிட்டாப்பட்டி ஊராட்சி தலைவராக 75 வயது மூதாட்டி தங்கவேலு தேர்வு 02-01-2020 || 05.45pm அதிமுக எம்எல்ஏ கணவர் தோல்வி  மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக...

நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை

நெல்லை கண்ணனின் கைதில் தமிழக அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, நெல்லை கண்ணன் நேற்று பெரம்பலூரில் கைது...

கடல் அலையை படம் பிடிக்கச் சென்ற இளைஞர் மாயம்

அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன. கலிபோர்னியா பகுதியில் சான்டா குரூஸ் போனி டூன் கடற்பகுதியில் பாறையில் ஒருவர் கடலலையை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்து வந்த பேரலை ஒன்று அந்த...