​​
Polimer News
Polimer News Tamil.

தேசிய குடிமக்கள் பதிவேடு: எந்த தனி நபரும் எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை

NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எந்த ஒரு ஆவணமும் அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வீடு வீடாக சென்று  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு தனிநபர்கள் தாமாக முன்வந்து...

ஹாங்காக்கில் அரசு எதிர்ப்பாளர்கள் பிரமாண்ட பேரணி

ஹாங்காங்கில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றன. 2020 புத்தாண்டு தொடக்க நாளான இன்றும் அரசு எதிர்ப்பாளர்களால் ஹாங்காங்கில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அரசுக்கு எதிரான  போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து...

2020ல் தமிழ்த் திரையுலகம் எதிர்நோக்கும் 10 புதிய திரைப்படங்கள்

புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் 2020ஆம் ஆண்டில் வெளியாக உள்ள முக்கியமான பத்து தமிழ்த் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.  அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின்...

அண்டை நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே  வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த மோடி இருநாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சு...

"One Nation, One Ration Card" கேரளா உட்பட 12 மாநிலங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் புத்தாண்டு முதல் தேதியில் இருந்து 12 மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய  அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் , மகாராஷ்ட்ரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய...

சீனாவுடன் அமெரிக்கா வரும் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம்

சீனாவுடன் அமெரிக்கா வரும் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது. வர்த்தக போர்  பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இருநாடுகளும் அண்மையில் பேச்சு நடத்தின. இதன்பின்னர் பிரச்னைக்கு தீர்வு காண முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதென முடிவு...

சீரியல் கில்லர் ஜோலி ஜோசப் வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள்

கேரளாவில் தமது கணவர் மற்றும் அவருடைய  குடும்பத்தினர் 5 பேரை சயனைடு விஷம் வைத்து கொலை செய்த ஜோலி ஜோசப் வழக்கில் சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 1800 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை தாமரசேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்....

ரயில்வேயில் இத்தனை அம்சங்களா.....! பார்வையாளர்களுக்கான பயனுள்ள கண்காட்சி

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலாப் பொருட்காட்சியில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உள்ள வசதிகள், அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்தவர்கள் விரிவான விளக்கங்களை அளித்து வருகின்றனர்.  சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலாப்...

ஓட்டலில் ஓசி சோறுக்காக நகராட்சி ஊழியர்கள் அடம்..! அம்பலத்துக்கு வந்த மிரட்டல்

காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட சோற்றுக்கு பணம் தர மறுத்து 5 நகராட்சி ஊழியர்கள் செய்த அடாவடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாப்பாட்டிற்கு காசு கேட்ட கடை உரிமையாளரிடம் உரிமத்தை ரத்து செய்வோம் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த...

கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பிரதமர் பங்கேற்பு

கர்நாடகாவில், இன்றும் நாளையும் என, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி இன்று கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று துமக்கூருவில் உள்ள சித்தகங்கா...