முகப்பு
உங்க பொண்ணு பாதுகாப்பா இருக்கனுமா? தயவுசெஞ்சு இதைப் பாருங்க. பகிருங்க
Mar 25, 2025 12:38 PM
97
வீட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எப்படி? சாலையில் பாதுகாப்பு எப்படி சாத்தியம்? காரில் பாதுகாப்பு எப்படி சாத்தியம்?
தெருக்களில். . கார்களில். . பள்ளிகளில். . பார்க்குகளில். . என எங்கு திரும்பினாலும் சிறுமிகளும், பெண்களும் பலாத்காரத்துக்கு ஆளாவதாக வரும் செய்திகள் பெண் பிள்ளைகளைப் பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அவர்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையில் பின்பற்றக் கூடிய மிகவும் பயனுள்ள டிப்ஸ்களைப் பார்க்கலாம்.
வீட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எப்படி?
குழந்தைகளையோ, பெண்குழந்தைகளையோ தனியாக வீட்டில் விட்டுச் செல்லும்போது கவனம்.
புதிய வீட்டுக் கதவின் சாவியை மாற்றுதல், கேமராக்கள் இருக்கின்றனவா? என உறுதிப்படுத்துதல், பார்த்தபின்பு திறக்கும் வகையிலான லென்சைக் கதவில் பொருத்துதல் நலம்.
நீங்களோ, உங்கள் பக்கத்துவீட்டுக்காரப் பெண்ணோ தனியாக இருக்கிறார்கள் என்ற தகவலை யாரிடமும் தவறிக்கூட உளறிவிடக்கூடாது.
தண்ணீர் கேட்டோ, போன் செய்ய வேண்டும் எனக் கேட்டோ வந்தால் செக்யூரிட்டியையோ, பக்கத்து வீட்டில் கேட்கும்படியோ சொல்ல வேண்டும்.
நீங்கள் அழைக்காத போதும், வீட்டு ரிப்பேருக்கு யாரேனும் வந்திருப்பதாகக் கூறினால், அவர்களது ஐடி கார்டைக் காட்ட சொல்ல வேண்டும்.
அதில் உள்ள அலுவலக எண்ணுக்கு அழைத்து அவர் எதற்காக இப்பகுதிக்கு வந்திருக்கிறார் என உறுதி செய்த பின்பே கதவைத் திறத்தல் நல்லது.
தனியாக வீட்டில் வசிக்கும் பெண்கள், முழு பெயரையும் குரியர் அட்ரஸில் கொடுக்காமல், தந்தை அல்லது கார்டியன் பெயரைக் குறிப்பிடுவது நல்லது.
இரவில் ஏதேனும் அறையில் விளக்கு எரிவதை உறுதி செய்ய வேண்டும்.
சாலையில் பாதுகாப்பு எப்படி சாத்தியம்?
பெண்கள் ஆள்நடமாட்டம் குறைந்த இடங்களில் தனியாகப் பயணிப்பதைத் தடுப்பது நல்லது.
கூட்டமாகவோ, உடன் யாருடனேனும் சேர்ந்தோ பயணிக்கலாம்.
வெளிச்சம், ஜன நடமாட்டம் இருக்கும் பாதை தூரமாக இருந்தாலும் அதை தேர்வு செய்வது நல்லது.
சீக்கிரம் குறுக்கு தடத்தில் செல்லலாம் என்பதற்காக புதர், கூட்டமில்லாத பார்க், கைவிடப்பட்ட பகுதிகள் வழியாக செல்லக் கூடாது.
முன்பின் தெரியாதவரோ, ஓரளவு தெரிந்தவரோ ‘நான் ட்ராப் செய்கிறேன்’ எனக் கூறினால் நம்பி உடன் செல்வதை தவிர்ப்பது நல்லது.
தனியாக செல்கையில் காதில் ஹெட்ஃபோன் போட்டபடி நடக்கும்போது, பின்னால் வாகனத்திலோ நடந்தோ பின்தொடர்பவர்களை சத்தம் மூலம் அடையாளம் காணலாம்.
வெளியே சென்று திரும்பும்போது யாரேனும் பின்தொடர்வதை உணர்ந்தால், வீட்டுச் சாவியை கையில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை அடைந்ததும் தாமதிக்காமல் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபின்பு கதவைப் பூட்ட வேண்டும். காவல்துறைக்கும் தகவல் தர வேண்டும்.
காரில் பாதுகாப்பு எப்படி சாத்தியம்?
கார் ஓட்டிச் செல்லும்போது பலாத்காரத் தொந்தரவுக்கு ஆளாக நேர்ந்தால், காரின் ஹாரனை தொடர்ந்து அழுத்தவும். தான் டேஞ்சரில் இருப்பதை உணர்த்த காரின் ஃபிளேஷ் லைட்டை மின்னி மின்னி அணைக்கும் வகையில் எரியவிடவும்.
உங்கள் காரின் லாக்குகள், வெளியில் இருந்தும் இயக்கும் வகையில் பாதுகாப்புக் குறைபாடோடு இருக்கிறதா? என சரிபார்க்கவும்.
எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், முன் பின் தெரியாதவர்களிடம் கார் கதவை திறக்கக் கூடாது.
மாற்றுத் தடத்தைப் பயன்படுத்தி பின் தொடர்பவர்களை சுற்றலில் விட்டபோதும், அவர்கள் உங்களையே பின் தொடர்கிறார்களா? என உறுதி செய்ய வேண்டும்.
யாரேனும் பின்தொடர்வதாகத் தெரிந்தால், அருகில் உள்ள காவல்நிலையம், தீயணைப்புத்துறை, சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடை, பெட்ரோல் நிலையத்துக்குள் புகுந்து தான் பின்தொடரப்படுவதை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். பின், அவர்கள் உதவியோடு போலீசாரை அணுகலாம்.
காரிலும், ஹேன்ட் பேக்கிலும் பெப்பர் ஸ்பிரே, அதிக சத்தம் எழுப்பும் விசில் ஆகியவற்றை வைத்திருத்தல் வேண்டும். ஆபத்தான சூழல் வரும்போது பயன்படுத்தி தப்பிக்க உதவும்.
அவை இல்லாதபோது கையில் கிடைக்கும் ஸ்பிரே பாட்டில், சாவி, சீப்பு கொண்டு கூட எதிராளியைத் தாக்கலாம்.
ஒருவேளை பலமான பிடியில் சிக்கிக் கொண்டால், மாற்று வழியில் எப்படித் தப்ப வேண்டும் என யோசிக்க வேண்டும். அதற்கு முதலில் பதற்றம் அடையாமல் சமயோசிதமாக சிந்திக்க வேண்டும்.
தனியாக செல்லும்போது யாருக்கும் லிஃப்ட் கொடுக்க வேண்டாம்.
கார் கதவு முன்கூட்டியே திறந்திருந்தால் பின் இருக்கையில் யாரேனும் இருக்கிறார்களா? எனப் பார்த்து பின்னரே ஏற வேண்டும்.
நீண்ட தூரம் டிரைவ் செய்ய நேரிட்டால் போதிய எரிபொருளை நிரப்பி, காரின் கண்டிசனை முன்கூட்டியே செக் செய்துகொள்ள வேண்டும்.
பார்கிங் லாட், செக்யூரிட்டி போன்ற இடங்களில் சாவியைக் கொடுத்துவிட்டுச் செல்லாது இருப்பதை உறுதிப்படுத்தவும்.
செல்லும் வழியில் வண்டி நின்றுவிட்டது என யாரேனும் உதவி கோரினால், நிறுத்தாமல் சென்றுவிடுங்கள். அருகில் உள்ள பெட்ரோல் பங்கிலோ, ஒர்க்ஷாப்பிலோ அல்லது சந்தேகம் இருந்தால் காவல்துறையிலோ பாதி வழியில் ஒரு வண்டி நின்றுகொண்டிருப்பது பற்றி தகவல் தெரிவித்துவிடலாம்.
உங்கள் கார் ரிப்பேர் ஆனாலும், காரை விட்டு இறங்க வேண்டாம். Need help என எழுதி காரின் பின்புற கண்ணாடியில் ஒட்டலாம். யாரேனும் உதவ முன்வந்தாலும், காரின் ஜன்னல் கதவுகளை பேசுவது கேட்கும் அளவுக்கு மட்டும் திறந்து உதவி கோரலாம். முன்பின் தெரியாதவர்களுடன் வண்டியில் ஏறி உடன் செல்ல வேண்டாம்.
பருவ வயதுக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பேபி சிட்டர்களை அப்பாய்ன்ட் செய்யும் முன்னதாக நன்கு விசாரிக்க வேண்டும். குடும்பத்தினர் தவிர யார் வந்தாலும் கதவைத் திறக்கக் கூடாது என்பதை நன்கு அறிவுறுத்த வேண்டும்.
பெற்றோர் வீடு வருவதற்குள் எக்காரணம் கொண்டு மகளை தனியாக விட்டுச் செல்லக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
ஏதேனும் தவறாக நடக்க முயற்சி நடந்தால் எப்படி அடையாளம் காட்ட வேண்டும் என குழந்தைகளுக்குக் கற்றுத் தருதலும் அவசியம்.
காரின் பெயர், நிறம், நம்பர் பிளேட் பார்த்தல்
என்ன நிறத்தில் இருந்தான்?
என்ன வயது இருக்கக் கூடும்?
யாரைப் போன்ற உயரம்? எடையில் இருந்தான்?
என்ன நிற ஆடை அணிந்திருந்தான்?
தழும்பு, டாட்டூ, வித்யாசமான அணிகலன் இருந்ததா?
அவனிடம் என்ன மாதிரியான தொழில் செய்பவருக்கான வாடை வீசியது? என தெரிந்திருக்க வேண்டும்.
அனைத்தையும் விட அதி முக்கியமானது. எந்த சூழலிலும் பெற்றோரிடம் உண்மையை மறைக்கக் கூடாது. உங்கள் பக்கம் தவறு இருந்தாலும் பெற்றோரிடம் தாராளமாக உண்மையை ஒப்புக் கொள்ளலாம். மாறாக பிளேக்மெயிலுக்கு பயந்தால், வாழ்வே பறிபோய்விடும். கவனம்!
காவல் உதவி ஆப்-ஐ டவுன்லோட் செய்து எமர்ஜென்சி SOS பட்டனை அழுத்தினால் காவல்துறையே உங்களை அழைத்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதை மறக்க வேண்டாம். 100 என்ற அவசர அழைப்பையும் தொடர்பு கொள்ளலாம்.
இத்தனை தடுப்பையும் மீறி யாரேனும் பிடியில் சிக்கினால் எப்படி தப்புவது என்ற டிப்ஸ் முதல் கமென்டில் உள்ள வீடியோ லிங்கில் உள்ளது. அதையும் பாருங்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu