முகப்பு
“ Fast-Tag - இன்றிலிருந்து என்ன மாறுது? யாருக்கெல்லாம் 2 மடங்கு கட்டணம்? Card Blacklist ஆகாம தடுப்பது எப்படி?”
Mar 25, 2025 12:32 PM
48
Fast-Tag - இன்றிலிருந்து என்ன மாறுது? Blacklist ஆகாம தடுப்பது எப்படி?”
நம்மில் பல பேர் டோல் பிளாசாவைப் பார்த்த பின்புதான் ‘அச்சச்சோ! ஃபாஸ்ட் டேகுக்கு ரீசார்ஜ் பண்ணலையே’ என நினைவுக்கு வந்து கடைசி நேரத்தில் ரீசார்ஜ் செய்வோம். இனி அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா என கராராக அறிவித்து விட்டது National Payments Corporation of India . சரி Fast Tag -ல் வந்துள்ள மாற்றங்கள் என்ன? இப்படி கூட கார் பிளாக்லிஸ்ட் ஆகுமா?. அபராதத்தைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ற முழு விவரத்தைப் பார்க்கலாம். .
நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் வாகனங்களுக்காக சுங்கக் கட்டணத்தை ஃபாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஸ்கேனிங் மூலம் செலுத்த வேண்டும் என்ற விதி அனைவரும் அறிந்ததே. பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் என்றால் என்ன தெரியுமா?
நமது ஃபாஸ்ட் டேக் கார்டில் குறைந்த பட்ச இருப்புத் தொகையான மினிமம் பேலன்ஸ் இல்லாத போதும், சுங்கக் கட்டணத்தைக் கழிக்கத் தேவையான பேலன்ஸ் இல்லாதபோதும் பாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் ஆகும்.
உங்களது ஃபாஸ்ட் டேக் ஸ்டேட்டஸ் KYC என்ற உரிய அடையாள ஆவணம் இணைக்கப்படாமல் இருந்தால் பிளாக் லிஸ்ட் ஆகும்.
அந்த KYC-யில், ஆர்.சி. என்ற வாகன உரிமைக்கான கார்ட் குறித்த ஆவணங்களையும் அப்டேட் செய்திருத்தல் அவசியம்.
உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட குற்றவழக்குகள், சிக்னல் ஜம்ப் போன்ற இ-சலான்கள் நிலுவையில் இருந்தாலும் பிளாக் லிஸ்ட் ஆகும்.
வாகனத்தை T போர்டில் இருந்து பர்சனல் பயன்பாட்டுக்கு முழுமையாக மாற்றாவிட்டாலும் பிளாக்லிஸ்ட் காட்டலாம்.
நீங்கள் ஏற்கெனவே விற்ற காரில், ஃபாஸ்ட்-டேக் கணக்கு மூடப்படாமல் அது வாங்கியவரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு புகார்கள் இருந்தாலும், உங்கள் பெயரில் சலான்கள் உருவாகி பிளாக்-லிஸ்ட் ஆகலாம்.
கடைசி நிமிட ரீசார்ஜால் என்னவாகும்?
முன்பெல்லாம் ஃபாஸ்ட் டேகில் பணம் இல்லாவிட்டால், வண்டியை ஓரமாக நிறுத்தி, ஸ்பாட்டிலேயே ரீசார்ஜ் செய்து அது அப்டேட் ஆகிவிட்டால், பின்னர் சுங்கச் சாவடியை அபராதமின்றி கடக்கலாம்.
ஆனால், தற்போது உங்களது ஃபாஸ்ட் டேக் கார்ட் கொண்ட வாகனம் சுங்கச் சாவடியை அடைவதற்கு 60 நிமிடங்கள் முன்பு வரை பிளாக்லிஸ்ட் செய்யப்படாமல் இருக்க வேண்டும்.
அப்படி ப்ளாக் லிஸ்ட் ஆனால் சுங்கக் கட்டணத்தை அபராதத்தோடு சேர்த்து இரு மடங்காக உயர்த்தி செலுத்த நேரிடும். எச்சரிக்கை!
இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
முன்கூட்டியே ஃபாஸ்ட் டேக் என்ன நிலைமையில் இருக்குன்னு பாத்துட்டு அப்புறமா வண்டி எடுக்கலாம்.
நீண்ட நாட்கள் பயன்படுத்தாத Fast-Tag கார்டுகள் ஆக்டிவ் ஆக உள்ளதா? எனப் பார்க்க வேண்டும்.
பயணம் முடிந்ததும் சுங்கக் கட்டணப் பணம் கணக்கில் இருந்து கழிந்ததா? என உறுதிசெய்தல் அவசியம்.
இரு மடங்கு கட்டணம் செலுத்திய பின் அபராதத் தொகையைத் திரும்ப வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
அபராதத்தை ரீஃபண்ட் வாங்குவது எப்படி?
இரு மடங்காக செலுத்திய அபராதத் தொகையை ரீஃபண்ட் வாங்க அவகாசம்
சுங்கச் சாவடியைக் கடந்த 10 நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்து, ஏற்கெனவே செலுத்திய பெனால்டி ரீஃபண்ட்-ஐ வங்கி ஆப் மூலம் முறையிட்டு கூடுதலாக செலுத்திய அபராதத் தொகையை திரும்பப் பெறலாம்.
அதுவே, 15 நிமிடங்கள் கடந்தால் இதற்கான தொகையை திரும்ப வாங்க முடியாது.
தாமதக் கட்டணம் எப்படி கணக்கிடப்படும்?
ஒரு வண்டி சுங்கக் கட்டணத்தை செலுத்திவிட்டு சுங்கச் சாவடியைக் கடந்த பின்பு, 15 நிமிடங்கள் வரையிலும் பணம் கணக்கில் இருந்து கழிக்கப்படாமல் பிராசஸிங்கிலேயே இருந்தால், ஃபாஸ்ட் டேக் பயனாளர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே, வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட் டேக் அபராதத்தைத் தடுக்க இந்த வழிமுறைகளை மறக்காமல் பின்பற்றுவதோடு, பயனுள்ள இந்த தகவலை பலருக்கும் பகிருங்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu