தமிழ்நாடு
வேங்கைவயல் சம்பவம் சாதியை வைத்து விளையாடிய அந்த 3 பேர் சிக்கியது எப்படி ? அமைதியின் பின்னணி அம்பலமானது
Jan 25, 2025 01:06 AM
20
909
வேங்கைவயல் சம்பவம் சாதியை வைத்து விளையாடிய அந்த 3 பேர் சிக்கியது எப்படி ? அமைதியின் பின்னணி அம்பலமானது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன் படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக 2 ஆண்டு விசாரணைக்கு பின்னர் அதே சமூகத்தை சேர்ந்த 3 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் குற்றபத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆயுதப்படை காவலர் உதவியுடன் அரங்கேறிய கொடுமையின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் முடுக்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்ம்பர் 26 ந்தேதி பரபரப்பு புகார் எழுந்தது. இந்த சம்பவம் அனைத்து சமுதாய மக்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து அதில் மனித கழிவு கலந்ததை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் ,தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இது சாதி ரீதியாக நடந்தப்பட்ட மிகப்பெரிய வன்கொடுமை என்று இயக்குனர் பா.ரஞ்சித்தும் குற்றஞ்சாட்டினார்
யாரெல்லாம் ஆரம்பத்தில் ஆவேசமாக பேசினார்களோ அவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் மவுனம் காக்க தொடங்கினர்
இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு வியாழக்கிழமை சிபிஐஐடி போலீசார் மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது. மேலும் வேங்கை வயல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 737 நாட்களுக்கு பின்னர் வேங்கைவயல் விவகாரத்தில் தொடர்புடைய 3 பேர் யார் என்பதை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
339 சாட்சிகளிடம் விசாரித்து, 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொண்டு , 31 பேரின் டி.என்.ஏ டெஸ்ட் மற்றும் அறிவியல் ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சிபிசிஐடி போலீசார், வேங்கைவயல் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் முரளி ராஜா, மற்றும் சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேர் தான் குடி நீரில் மனித கழிவை திட்டமிட்டு கலந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா என்பவரின் கணவர் முத்தையா , குடி நீர் திறக்கும் பணியில் இருந்த சண்முகம் என்பவரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். இதனால் முத்தையாவை பழிவாங்கும் நோக்கத்திலும் சாதி பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்றும் சதித்திட்டம் தீட்டி குடி நீர் தொட்டியில் இருந்து துர் நாற்றம் வருகின்றது என்று முதலில் காவலர் முரளிராஜா பொய்யான தகவலை ஊருக்குள் பரப்பி உள்ளார்.
சம்பவத்தன்று இரவு இதனை உண்மையாக்குவதற்காக சுதர்சனும், முத்துகிருஷ்ணனும் சேர்ந்து மனிதகழிவை எடுத்துச்சென்று மேல் நிலை தண்ணீர் தொட்டியில் ஏறி குடி நீரில் கலந்ததாக சிபிசிஐடி போலீசார் குற்றபத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர். நேற்றுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், சிபிஐ வசம் விசாரணை சென்று விடக்கூடாது என்பதற்காக விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
இதுவரை வேங்கைவயல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் , உண்மை அம்பலமானதால் வாயடைத்து போயுள்ளதாக முடுக்காடுபஞ்சாயத்து தலைவரின் உறவினர்களும் அங்குள்ள மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் வழக்கை விசாரிக்க தொடங்கிய சிபிசிஐடி போலீசார் ஆரம்பத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வன்கொடுமை வழக்கு நீக்கப்பட்டுள்ளது ..!
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News