இந்தியா
மனைவியை துண்டுகளாக்கி குக்கரில் வேகவைத்தது ஏன்..? கொலைக்கு இது தான் காரணமா..?
Jan 24, 2025 01:32 AM
20
604
மனைவியை துண்டுகளாக்கி குக்கரில் வேகவைத்தது ஏன்..? கொலைக்கு இது தான் காரணமா..?
மனைவியை கொலை செய்த முன்னாள் ராணுவவீரர் ஒருவர், மனைவியின் உடல் பாகங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேக வைத்து கரைத்து கூழாக்கி ஏரியில் வீசிய கோர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் மீர் பேட் காவல் நிலையத்துக்கு தங்கள் பேரப்பிள்ளைகளுடன் சென்ற முதிய தம்பதியர், “தங்கள் மகள் வெங்கட மாதவியை கடந்த சில தினங்களாக காணவில்லை என்று புகார் தெரிவித்தனர்
காவல் துறையினர் வழக்கின் விசாரணையை வெங்கட மாதவியின் கணவர் குருமூர்த்தியிடம் இருந்து தொடங்கினர். முன்னாள் ராணுவவீரரான குரு மூர்ர்த்தி , விருப்ப ஓய்வுக்கு பின்னர் தற்போது ஐதராபாத் காஞ்சன்பாக்கில் உள்ள டிஆர்டிஓவில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார். திருமணம் முடிந்து 13 ஆண்டுகளாகும் நிலையில் தனக்கும் மனைவிக்கும் எந்த பிரச்சனையும் ஏற்பட்டது கிடையாது என்று தெரிவித்த குருமூர்த்தி. கடந்த 17 ந்தேதி வீட்டை விட்டு சென்ற மனைவி , அவரது செல்போனையும் கையோடு எடுத்துச்சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
வெங்கட மாதவியின் செல் போன் நம்பரை பெற்ற போலீசார் அதனை வைத்து செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். கடைசியாக அவரது செல்போன் 17 ந்தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருந்ததும். அவரது வீட்டில் வைத்தே சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடித்த போலீசார். வெங்கட மாதவியின் நடவடிக்கை குறித்து அக்கம் பக்கத்து விட்டாரிடம் விசாரித்தனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு குருமூத்தி அவரை அடித்து உதைப்பார் என்று தெரிவித்தனர். இதையடுத்து தனது மனைவியுடன் பிரச்சனையே இல்லை என்ற குருமூர்த்தியிடம் மீண்டும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குருமூர்த்தியின் வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்ட நிலையில் வெங்கட மாதவியின் செல்போன் கைப்பற்றப்பட்டது. அதனை வைத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்ற போலீசார், வெங்கட மாதவி எங்கே ? என்று குருமூர்த்தியை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். போலீசாரிடம் தான் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட குருமூர்த்தி மனைவியின் சடலத்தை அந்தப்பகுதியில் உள்ள ஏரியில் வீசியதாக தெரிவித்தார். அங்கு சென்று பார்த்த போது ஏரியில் எந்த ஒரு சடலமும் கண்டெடுக்கப்பட்டவில்லை. அப்படியென்றால் வெங்கட மாதவிக்கு உண்மையிலேயே என்ன நடந்தது ? என்பதை அறிய போலீசார் தங்கள் புலன் விசாரணையை தீவிரப்படுத்தினர். மனைவியின் சடலத்தை துண்டுகளாக்கி குக்கரில் போட்டு அவித்து கரைத்து ஏரியில் கொட்டிவிட்டதாக கூறி போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் குருமூர்த்தி
மனைவி குழந்தைகளை பிரிந்து குருமூர்த்தி ராணுவத்தில் இருந்த நேரம், வெங்கடமாதவி தனது ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசி பொழுதை கழித்ததாகவும், இதனை பலமுறை கண்டித்த அவர் ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து பணியை உதறிவிட்டு ஊர் திரும்பியதாக கூறப்படுகின்றது. தனது மனைவி தன்னை தவிர வேறு ஆண்களுடன் பேசினாலே சந்தேகம் கொள்ளும் மன நிலையில் இருந்த குரு மூர்ர்த்தியின் தீராத சந்தேகமே அவரை கொடூர மன நிலைக்கு தள்ளியதாக கூறப்படுகின்றது.
இதனால் தனது கட்டுக்குள் அடங்காத மனைவியை கொலை செய்ய கடந்த 6 மாதகாலமாக திட்டமிட்ட குருமூர்த்தி யூடியூப் மற்றும் ஹாலிவுட் படங்களை பார்த்துள்ளார். மனைவி குழந்தைகள் வெளியூர் சென்றிருந்த நிலையில் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்றை அடித்து கொன்று , அதனை வீட்டிற்குள் எடுத்து வந்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு வேக வைத்துள்ளார். அளவுக்கதிகமாக வெந்து போனதால் நாயின் சதை கூழாகி கரைந்து போனதாக கூறப்படுகின்றது. அதன் எலும்புகள் மட்டுமே மிஞ்சியுள்ளது. இதே போல தனது மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் குருமூர்த்தி
அதன்படி கடந்த 16 ந்தேதி இரு குழந்தைகளையும் சங்கராந்தி பண்டிக்கைக்காக தனது பாட்டிவீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் அன்று இரவு மனைவி வெங்கட மாதவியுடன் நடத்தை குறித்து வாக்குவாதம் செய்த குருமூர்ர்த்தி , அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும், மனைவியின் உயிரற்ற உடலை ரத்தம் உறைவதற்காக குளிர்பதன பெட்டிக்குள் மறைத்து வைத்து விட்டு, சடலத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேகவைத்து கூழாக்கி ஏரி தண்ணீரில் கரைத்ததாகவும், மிச்சம் மீதி இருந்த மனைவியின் எலும்புகளை உடைத்து நொறுக்கி ஏரிக்குள் வீசியதாகவும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குருமூர்த்தி கூறியுள்ளார். அவரது வீட்டில் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார் , கைது செய்யப்பட்ட குரூர குருமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தம்பதியர் தங்கள் இருவருக்குள்ளும் குறைந்த பட்ச நேர்மையுடன் நடந்து கொண்டாலே தீரா சந்தேகமும் ஏற்படாது இது போன்ற கொடூர சம்பவங்களும் சமூகத்தில் நடக்காது என்கின்றனர் காவல்துறையினர்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News