BIG STORIES
“அவருக்கு கால் இல்லடா... கையும், காலும் இருந்தாலும்... நீங்க இரக்கமில்லாதவங்கடா..” ஆர்.பி.எப். என்று அடித்தது போலீஸ் ஏட்டு
Jan 03, 2025 01:45 AM
20
400
“அவருக்கு கால் இல்லடா... கையும், காலும் இருந்தாலும்... நீங்க இரக்கமில்லாதவங்கடா..” ஆர்.பி.எப். என்று அடித்தது போலீஸ் ஏட்டு
மன்னார்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணித்த கருணாநிதி என்ற ((ஒரு கால் இழந்த )) மாற்றுத்திறனாளியை தாக்கிய காட்சிகள் தான் இவை..!
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில் மற்ற பயணிகள் ஏற அனுமதி இல்லாததால் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப் என்று கூறி 3 பேர் கதவைத் திறக்குமாறு தட்டியுள்ளதாகவும், பெட்டியில் இருந்த மாற்றுத்திறனாளிகள் கதவைத் திறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
கொரடாச்சேரியில் ரயில் நின்றபோதும் கதவைத் திறக்கவில்லை. இந்நிலையில் திருவாரூரில் ரயில் நின்றபோது பயணி ஒருவர் இறங்குவதற்காக கதவைத் திறந்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஏறிய மூன்று பேர் ஆர்.பி.எப் என்று சொல்கிறோம், அப்படி இருந்தும் கதவைத் திறக்க மாட்டியா நீ? என்று கேட்டு மாற்றுத்திறனாளியான கருணாநிதியை கன்னத்தில் பளார்..பளார் என அறைந்து தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் அந்தப் பெட்டியில் இருந்து இறங்கி பக்கத்து பெட்டிக்கு சென்று அதே ரெயிலில் பயணித்த நிலையில், தனது புகாரின் பேரில் வந்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அபாய சங்கிலியை இழுத்துப் பார்த்தேன் வேலை செய்யவில்லை என்று கருணாநிதி வேதனை தெரிவித்தார்
தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில் தாக்கிய நபர்கள் உண்மையிலேயே ஆர்.பி.எப் தானா அல்லது வேறு நபரா என்பது குறித்து ரெயில்வே காவல்துறையினர் விசாரித்தனர். இதில் கருணாநிதியை தாக்கியது நீடாமங்கலம் காவல் நிலைய தலைமைக்காவலர் பழனி என்பது தெரியவந்தது அவரை தேடி வருகின்றனர்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2024 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News