அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி, மயக்கம்.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

0 3211

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மாணவி உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வையங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 188 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டது.

அதை சாப்பிட்ட சில மணி நேரத்தில் பிரதீஷ், கார்த்திகா, நவீன்குமார், பாலமுருகன், பால்ராஜ் உள்ளிட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாவட்ட கல்வி அலுவலர் கோகிலா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments