​​
Polimer News
Polimer News Tamil.

கன்னியாகுமரியில் வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தற்கொலை... கைதுக்குப் பயந்து மாமியாரும் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வரதட்சணைக் கொடுமையால் மருமகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கைதுக்குப் பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அவரது மாமியாரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக் - சுருதிபாபு தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், மாமியாரின் வரதட்சணைக்...

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ 2 கோடி வரை வர்த்தகம்

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தையில் விற்கப்பட்ட புத்தாடைகள்,இனிப்புகள்,பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.  மொத்த விலையில் ஜவுளிகளை வாங்கிச் செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா,ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா போன்ற வெளிமாநில வியாபாரிகள்...

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

2 குழந்தைகள் இருக்கும் நிலையில் காதலித்து திருமணம் செய்த கணவனுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கொடுத்த இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் ஒருவர், காதலனுடன் சேர்ந்து கணவனை தலையனையால் அழுத்தி கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் தன்னை ஒரு சர்வதேச மேக் ஓவர்...

கர்நாடக மாநிலம், செல்ஃபி எடுக்கும் போது ஏரியில் தவறி விழுந்த பெண்...12 மணி நேர போராட்டத்தில் மீட்ட தீயணைப்புத் துறையினர்

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள மை டாலா ஏரியில் பாறையின் மீது நின்று செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் 12 மணி நேர போராட்டத்தில் மீட்கப்பட்டார். தனது நண்பர்களுடன் மை டாலா ஏரிக்கு சென்ற ஷிவரனாபுரா...

நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்று வரும் ஐப்பசி கல்யாண திருவிழா

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி கல்யாண திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நாளை நடக்கவுள்ள திருக்கல்யாணத்தை முன்னிட்டு தபசு இருந்த காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவத்தை திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். தொடர்ந்து கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலில் காந்திமதி அம்பாள்...

புதுக்கோட்டை அருகே குளத்தைக் கடந்துச் செல்ல முயன்ற 2 சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கண்ணக்கோன் பட்டியில் குளத்தைக் கடந்துச் செல்ல முயன்ற 2 சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பெற்றோர் இல்லாமல் தனியாக கோவிலுக்குச் சென்ற 14 வயதான காயத்ரி மற்றும் 4 வயதான கவி ஸ்ரீ இருவரும் குளத்தின் நடுவே உள்ள பள்ளத்தில்...

"விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை புறக்கணிப்பதை ஏற்க முடியாது" - நீதிபதி

சிறுவர், இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் ஒரு தரப்பை புறக்கணிப்பு செய்து போட்டி நடத்துவதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் அருகே  குண்டேந்தல்பட்டி கிராமத்தில் தீபாவளியன்று நடைபெறும் விளையாட்டு போட்டியில் ஒரு பிரிவினரை புறக்கணிப்பு செய்வதை தடுக்கக் கோரி வழக்கு...

துப்புரவு பணியாளர் உடையில் 6வது வார்டு உறுப்பினர் வருகை...துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்ததாக போராட்டம்

நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் முடிந்த பின்னர் துப்புரவு பணியாளர்களின் உடையில் வந்த 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ், துப்புரவு பணிகளை தனியாருக்கு தாரை வார்த்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ், துப்புரவு பணியாளர்களுக்கு முறையான சம்பளம்...

லாட்டரி அதிபர் மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது வீட்டில் 7 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பாக மார்டின், அவரது...

மழை ஓய்ந்த நிலையில் நீர்நிலைகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்துள்ள நிலையில், ஆறுகள், குளங்கள், அணைகள் உட்பட நீர்நிலைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். சுசீந்திரம் பழையாறு பகுதியில் கரையோரங்களில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட அவர், தண்ணீர் தேங்கும் பகுதிகளையும், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும்...