​​
Polimer News
Polimer News Tamil.

லாட்டரி அதிபர் மார்ட்டின் வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது வீட்டில் 7 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பாக மார்டின், அவரது...

மழை ஓய்ந்த நிலையில் நீர்நிலைகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்துள்ள நிலையில், ஆறுகள், குளங்கள், அணைகள் உட்பட நீர்நிலைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். சுசீந்திரம் பழையாறு பகுதியில் கரையோரங்களில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட அவர், தண்ணீர் தேங்கும் பகுதிகளையும், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும்...

பெருமுகை அருகே பாலாற்றில் பட்டப் பகலில் மணல் கொள்ளை... ஒரு டிப்பர் லாரி, 2 லோடு வேன்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் பெருமுகை அருகே பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு டிப்பர் லாரி, இரண்டு லோடு வேன்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். பகல் நேரங்களில் அவ்வப்போது மணல் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு...

த.வெ.க. மாநாட்டை முடித்துவிட்டு புதுச்சேரி சென்ற கார் டூவீலர் மீது மோதியதில் மீனவர்களுடன் தகராறு

விக்கிரவாண்டி மாநாட்டை முடித்து விட்டு புதுச்சேரிக்கு சென்ற த.வெ.க கட்சியினருக்கும், வம்பாகீரப்பாளையம் மீனவ மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மீனவர்கள் 2 பேர் காயம் அடைந்ததது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். சென்னையைச் சேர்ந்த த.வெ.க.வினர் 15 பேர் 3 கார்களில் இரவில் புதுச்சேரி...

புதிதாக திறக்கப்பட உள்ள முதல்வர் படைப்பகத்தை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு

நவம்பர் 4ஆம் தேதி அன்று சென்னை, கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், சென்னையில் முதல் முறையாக திறக்கப்பட உள்ள இந்த பகிர்ந்த பணி இடத்தில்...

பெருங்களத்தூரில் ஒரே இரவில் 3 இடங்களில் திருட்டு

சென்னை, பெருங்களத்தூர் என்.ஜி.ஓ காலனியில் ஒரே இரவில் 3 இடங்களில் திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பல் மருத்துவமனையின் கதவை உடைத்து 3 ஆயிரம் ரூபாயும், தேவாலயத்தின் பூட்டை உடைத்து 5 ஆயிரம் ரூபாயும் திருடிய நிலையில்...

தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் நடந்த த.வெ.க. மாநாடு என அமைச்சர் ரகுபதி பேட்டி

தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் கூட்டத்தை காட்டுவதற்காக தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டு ஷோவை நடத்தியுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் ரகுபதி, நேற்று நடந்தது மாநாடு என்பதை விட, பிரம்மாண்ட சினிமா ஷூட்டிங் என்றே சொல்லலாம்...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

திருவள்ளூர் நகராட்சியுடன் தங்களது கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பாச்சூர், சிறுவானூர், காக்களூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்...

சென்னை திருவொற்றியூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை

சென்னை திருவொற்றியூரில்  வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல், கல்வித் துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், மயக்கம்  ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....

மேட்டூர் அருகே பஞ்சு பொதிகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் தடுப்புச் சுவரில் மோதி விபத்து

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பஞ்சு பொதிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, சாலையில் திரும்பிய போது, அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது. முன்பக்க டயர்கள் தனியாக கழன்றதுடன், பஞ்சு பொதிகளும்...