​​
Polimer News
Polimer News Tamil.

கால்வாயில் சபீதா கல்லூரி கழிவு நீரை கொட்டுவதாக துரைமுருகன் புகார்

பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் செல்லும் கால்வாயில் சபீதா கல்லூரி கழிவுநீர் முழுவதும் கலப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காட்பாடி அடுத்த சேனூர் பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு விலையில்லா...

உயர் மின்னழுத்த கம்பியை வேறிடம் மாற்ற ரூ.8,000 லஞ்சம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே வீடு ஒன்றின் மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியை வேறு இடத்திற்கு மாற்ற எட்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்னல் கிராம மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலக போர்மேன் கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். உயர் மின்னழுத்த கம்பியை...

சிவகங்கையில் மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் பால்குட ஊர்வலம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா நகர், காளையப்பா நகர் உள்பட பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் பால்குடங்களை சுமந்துச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர்...

திருவாரூர் அருகே நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி - உயிர் தப்பிய காட்சி..

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திடீரென நிலைதடுமாறி சாலையில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி, பின்னால் வந்த தனியார் பேருந்து பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டதால் உயிர் தப்பிய காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திடீர் பிரேக் பிடிக்கப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த...

த.வெ.க. மாநாட்டின் பாதுகாப்பு பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிய காவலர் உயிரிழப்பு..

விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டின் பாதுகாப்பு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிய காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் சத்தியமூர்த்தி ஹெல்மெட் அணியாமல் வேகமாகச் சென்றபோது அய்யூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்...

திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்..

திருச்செந்தூரில் கோயில் கடற்கரையில் கடல் தண்ணீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி தினங்களில் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கும் நிலையில், அமாவாசைக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே  உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர். கடல் உள்வாங்கியதால், நாழிக்கிணறு முதல்...

அரியலூரில், புதிய பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே முள்ளுக்குறிச்சியிலிருந்து சென்னை கிளம்பாக்கத்திற்கு செல்லும் புதிய பேருந்து சேவையினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெட் பஸ் போன்ற தனியார் முன்பதிவு செயலியில் அதிக...

ராயப்பேட்டையில், அண்ணா பேரவை தொழிலாளர்களுக்கு நிதி உதவி காசோலையை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த நிலையில் உள்ள 171 தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், எதிர்வரும்...

மதுரையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மூர்த்தி

மழைவெள்ளத்தால் மதுரையில் பாதிப்பு எங்கே ஏற்பட்டுள்ளது என எம்.பி. சு.வெங்கடேசன் கூறவேண்டும் எனவும், வெள்ளத்தால் பாதிக்கப்படாத நிலையில் நிவாரணம் எதற்கு கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ்...

போரூர் அருகே லாரியின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

சென்னை போரூர் அருகே கடந்த 23-ஆம் தேதி லாரியின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆலப்பாக்கத்தை சேர்ந்த வெண்ணிலா தனது மகள் மற்றும்...