​​
Polimer News
Polimer News Tamil.

தீபாவளியைக் கொண்டாட வெளியூர் சென்ற மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

தீபாவளியைக் கொண்டாட வெளியூர் சென்ற மக்களால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான கார்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அணி வகுத்து நின்றன.   மீஞ்சூர் -கிளாம்பாக்கம்...

அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகளோடு தீவிர சிகிச்சை கட்டடம்...அடிக்கல் நாட்டிய பிரதமர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுவதற்கு காணொலி மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை...

கோவையில் 6ஆம் வகுப்பு மாணவரை 11ஆம் வகுப்பு மாணவர் தாக்கியதாக தகவல்

கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவரை 11ஆம் வகுப்பு மாணவர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 6ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை 11ஆம் வகுப்பு மாணவர் தனது...

சென்னை மாநகராட்சியின் இன்றை மாமன்ற கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு கோசாலைகள் அமைப்பதற்கு நிர்வாக ரீதியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானங்கள் மற்றும் 595 பூங்காக்களின் பராமரிப்பை தனியாருக்கு வழங்குதல் உள்பட...

கால்வாயில் சபீதா கல்லூரி கழிவு நீரை கொட்டுவதாக துரைமுருகன் புகார்

பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் செல்லும் கால்வாயில் சபீதா கல்லூரி கழிவுநீர் முழுவதும் கலப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காட்பாடி அடுத்த சேனூர் பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு விலையில்லா...

உயர் மின்னழுத்த கம்பியை வேறிடம் மாற்ற ரூ.8,000 லஞ்சம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே வீடு ஒன்றின் மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியை வேறு இடத்திற்கு மாற்ற எட்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்னல் கிராம மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலக போர்மேன் கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். உயர் மின்னழுத்த கம்பியை...

சிவகங்கையில் மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் பால்குட ஊர்வலம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா நகர், காளையப்பா நகர் உள்பட பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் பால்குடங்களை சுமந்துச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர்...

திருவாரூர் அருகே நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி - உயிர் தப்பிய காட்சி..

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திடீரென நிலைதடுமாறி சாலையில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி, பின்னால் வந்த தனியார் பேருந்து பிரேக் பிடித்து நிறுத்தப்பட்டதால் உயிர் தப்பிய காட்சி பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திடீர் பிரேக் பிடிக்கப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த...

த.வெ.க. மாநாட்டின் பாதுகாப்பு பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிய காவலர் உயிரிழப்பு..

விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டின் பாதுகாப்பு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிய காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் சத்தியமூர்த்தி ஹெல்மெட் அணியாமல் வேகமாகச் சென்றபோது அய்யூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்...

திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்..

திருச்செந்தூரில் கோயில் கடற்கரையில் கடல் தண்ணீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி தினங்களில் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கும் நிலையில், அமாவாசைக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே  உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர். கடல் உள்வாங்கியதால், நாழிக்கிணறு முதல்...