​​
Polimer News
Polimer News Tamil.

தீபாவளி பண்ட் சீட் நடத்தி ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதியனர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தில் தீபாவளி பண்ட் சீட் நடத்தி விட்டு 6 லட்சம் ரூபாயோடு தலைமறைவான தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறிய நிலையில்,...

தீபாவளிக்கு தனியாரிடம் வாடகைக்கு எடுத்த ஆம்னி பேருந்துகள் சுமூகமாக இயக்கம்: சிவசங்கர்

தனியாரிடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்துகள் வழக்கமான கட்டணத்திலேயே எவ்வித பிரச்னையும் இன்றி இயக்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு செய்த அமைச்சர், தீபாவளி கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். அரசுப்...

அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி வைத்த தீப உற்சவ விழா புதிய கின்னஸ் சாதனை படைத்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரயூ நதிக்கரையின் இருபுறமும் திரண்டிருந்து தீபங்களை ஏற்றினர். மிக அதிகளவில் மக்கள் திரண்டதாலும் 25 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டதாலும் இரண்டு...

நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கட்டடங்கள் நேற்றிரவு கண்கவரும் மின்விளக்குகளால் ஜொலித்தன சண்டிகர் நகரம் முழுவதும் மின்விளக்குகள் தீபாவளியை வரவேற்றன கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் மின்விளக்குகள் ஜொலித்தன தலைநகர் டெல்லியில் குடியரசுத் தவலைவர்...

நவம்பர் 1 முதல் புதிய படப்பிடிப்புகள் நிறுத்தம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பிற்க்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு

நவம்பர் 1 முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான பணிகள் எதையும் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புக்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு...

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி சர்தார் வல்லபாய் பட்டேலின்  சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.  பிரதமரின் தலைமையில் தேச ஒற்றுமைக்கான உறுதிமொழியையும் ஏராளமானோர் ஏற்க உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து படைவீரர்களின் அணிவகுப்புகள் நடைபெற உள்ளன.எல்லைப் பாதுகாப்பு படை...

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

நீட் தேர்வில் 129 மதிப்பெண் எடுத்து விட்டு 698 மதிப்பெண் எடுத்ததாக, அடையாறு ஸ்டூடன்ஸ் ஜெராக்ஸ் கடையில் போலி சான்றிதழை தயாரித்து சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற மாணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மேடவாக்கம் ரவி தெரு ராயல்...

வத்தலக்குண்டு, நிலக்கோட்டையில் சட்டவிரோத லாட்டரி விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கிவந்து விவசாயிகள், வியாபாரிகள், தினக்கூலித் தொழிலாளர்களை குறிவைத்து குடிசை தொழில் செய்வது போல் வீடுகளிலும், கடைகளிலும் விற்பனை...

கடை உரிமையாளரை தாக்கிய கவுன்சிலரை தேடி வரும் போலீசார்

பைக் பார்க்கிங் தகராறில் சென்னை, பொழிச்சலூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அடித்து நொறுக்கி, உரிமையாளரை தாக்கிய புகாரில் தாம்பரம் மாநகராட்சியின் 8வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வருவதாக சங்கர் நகர் போலீசார்...

ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிற்கு மனித உரிமைகள் ஆணையம் விரைவில் சம்மன்

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரத்தில் விசாரணை குற்றவாளிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்த ஆணைய தலைவர் மணிகுமார், அம்பாசமுத்திரம் வழக்கில் 5 வாரங்களுக்குள் அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி...