​​
Polimer News
Polimer News Tamil.

மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரம்.. மகளின் மாமியாரை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை..

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் மகளின் மாமியாரை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா, அதே கிராமத்தை சேர்ந்த வினித்-ஐ காதலித்து...

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு.. நாடு முழுவதும் 2 லட்சம் பேர் தேர்வெழுதினர்..

2022 - 23ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்காக தேசிய தேர்வு முகமை, நாடு முழுவதும் 256 தேர்வு மையங்களை அமைத்தது. சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். 800...

கர்நாடகத்தில் சாலையோர மரத்தில் வாகனம் மோதியதில் 7 பேர் பலி; 10 பேர் காயம்

கர்நாடகத்தின் தார்வாடு மாவட்டத்தில் நேற்றிரவு சாலையோர மரத்தின் மீது வாகனம் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு ஒரு வாகனத்தில் 21 பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வாகனம் நிகடி என்னுமிடத்தில் வந்தபோது...

மனைவி என நினைத்து சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை குத்திக் கொலை செய்த நபர்..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மனைவி என நினைத்து சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை குத்திக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கணவனை இழந்த தனலட்சுமி என்ற பெண், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுத்து வந்ததாக...

முதல் நாள் சிறையில் இரவு உணவை தவிர்த்த சித்து..!

பாட்டியாலா சிறையில் அடைக்கபட்டுள்ள பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, இரவு உணவை தவிர்த்து மருந்துகளை மட்டும் எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்றும், மற்ற கைதிகளைப்...

தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு எழுதினர்..

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் நடைபெற்றன. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்பு உதவியாளர், நகராட்சி ஆணையர், தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட 5 ஆயிரத்து...

பின்லாந்துக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது ரஷ்யா..!

பின்லாந்து நாட்டுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தி ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. பின்லாந்து அரசு உடைமையான Gasum எரிவாயு விநியோகத்திற்கான பணத்தை ரூபிளில் செலுத்த மறுத்துவிட்டது. மேலும் பின்லாந்து நேட்டோ உறுப்பினராக விண்ணப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் நீடிக்கும் போதும் ரஷ்யா பல்வேறு ஐரோப்பிய...

கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் இருவர் உயிருடனும் மூவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் ஆறாவது நபரை...

தமிழகத்தில் தாய், மகளுக்கு உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை அருகே நாவலூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் BA4 என்கிற புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கிங்ஸ் வளாகத்தில் தேசிய முதியோர் நல மருத்துவமனைக் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து அமைச்சர்...

விரைவில் நிரம்பும் மேட்டூர் அணை..!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 115 அடியைத் தாண்டியுள்ளது. விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப்...